Job Alert: 6,000 பேருக்கு மத்திய அரசு பணி.! டிகிரி இருக்கா?! அப்போ உங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.!

Published : Nov 21, 2025, 08:36 AM IST

இந்திய ரயில்வே, ஸ்டேஷன் மாஸ்டர், சரக்கு ரயில் மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் மொத்தம் 5,810 காலிப்பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பட்டப்படிப்பு முடித்த தகுதியான விண்ணப்பதாரர்கள் 27.11.2025-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

PREV
13
வேலை இருக்கு கவலை வேண்டாம்

நாட்டின் மிகப்பெரிய பொது துறை அமைப்பான இந்திய ரயில்வே, பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 5,810 காலிப்பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தலைமை வணிக டிக்கெட் மேற்பார்வையாளர், ஸ்டேஷன் மாஸ்டர், சரக்கு ரயில் மேலாளர், இளநிலை கணக்கு உதவியாளர், முதுநிலை எழுத்தர் மற்றும் போக்குவரத்து உதவியாளர் போன்ற முக்கிய பதவிகள் இதில் அடங்குகின்றன. 

ரயில்வே துறையில் நிலையான வேலை, கையிருப்புச் சம்பளம், பயணச்சலுகை, ஓய்வூதிய நன்மைகள் போன்ற காரணங்களால், அரசுத் துறையில் வேலையை விரும்பும் இளைஞர்களுக்கு இது பெரிய வாய்ப்பாக அமைகிறது.

23
இத்தனை பதவிகள் காத்திருக்கு

பணியிட விவரங்களில், ஸ்டேஷன் மாஸ்டர் - 615, சரக்கு ரயில் மேலாளர் - 3416, இளநிலை கணக்கு உதவியாளர் - 921, முதுநிலை எழுத்தர் - 638, தலைமை வணிக டிக்கெட் மேற்பார்வையாளர் - 161, போக்குவரத்து உதவியாளர் - 59 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. 

தகுதியை பொறுத்தவரை, பெரும்பாலான பதவிகளுக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணக்குத் துறை மற்றும் தட்டச்சர் பதவிகளுக்கு கூடுதலாக ஆங்கிலம் அல்லது இந்தியில் கணினி தட்டச்சுத் திறன் வேண்டும்.

33
கைநிறைய சம்பளம் கிடைக்கும்

வயது வரம்பாக 18 முதல் 33 வயது வரை விண்ணப்பிக்கலாம். அரசின் விதிப்படி SC/ST க்கு 5 ஆண்டுகள், OBC க்கு 3 ஆண்டுகள், PwBD க்கு 10 ஆண்டுகள் வயது தளர்வு வழங்கப்பட்டுள்ளது. சம்பளம் பதவிப்படி ரூ.25,500 முதல் ரூ.35,400 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறையில், CBT-1, CBT-2, தட்டச்சு / CBAT (பதவிக்கு ஏற்ப), ஆவணச் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை இடம்பெறும். பொதுப்பிரிவினருக்கு ரூ.500 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்; தேர்வு எடுத்த பின் ரூ.400 திருப்பி அளிக்கப்படும். SC/ST/PwBD/பெண்கள் உள்ளிட்டோருக்கு ரூ.250 கட்டணம், தேர்வுக்குப் பிறகு முழுமையாக திருப்பி வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் RRB இணையதளம் மூலம் ஆன்லைனில் 27.11.2025க்குள் விண்ணப்பிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories