சாதாரண கீரைகளை விட 40 மடங்கு அதிக சத்துக்கள் கொண்ட மைக்ரோ கிரீன்ஸ், குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டித் தரும். சிவகங்கை, பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம், மைக்ரோ கிரீன்ஸ் வளர்ப்பு குறித்து ஒரு நாள் இலவச பயிற்சியை ஏற்பாடு செய்துள்ளது.
வீட்டிலேயே குறைந்த இடத்தில், குறைந்த செலவில், அதிக லாபம் ஈட்டித் தரும் ஒரு வேளாண்மை துறையாக மைக்ரோ கிரீன்ஸ் இன்று நாட்டின் பல இடங்களில் வேகமாக வளர்ந்து வருகிறது. உணவு மற்றும் ஊட்டச்சத்து துறையில் புரட்சியை ஏற்படுத்தும் இந்த சிறிய பசுமையான தாவரங்கள், சாதாரண கீரைகளைக் காட்டிலும் 40 மடங்கு அதிக சத்துக்களை கொண்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் ஆரோக்கிய உணவு ஹோட்டல்கள், ஜூஸ் பார், ஜிம்கள், டிரயட் புட் ஸ்டோர்கள், வீட்டிலிருந்து ஆன்லைன் விற்பனை போன்ற பல துறைகளில் இதற்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
25
எந்த ஊர்ல பயிற்சி நடக்குது தெரியுமா?
இந்த நிலையில், மைக்ரோ கிரீன்ஸ் வளர்ப்பை தொழில்முறை ரீதியாக கற்றுக்கொடுத்து வருமானம் பெற விரும்புவோருக்கு சிறந்த வாய்ப்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம், பிள்ளையார் பட்டி, சிவகங்கை பகுதியில் இலவச பயிற்சி ஏற்பாடு செய்துள்ளது.
35
எல்லாம் கத்து்கலாம் மக்களே.!
வரும் நவம்பர் 25-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த பயிற்சியில், விதைத் தேர்வு, டிரே & மீடியா அமைப்பு, தண்ணீர் அளவு, அறுவடை முறை, சந்தை விற்பனை, பேக்கேஜிங் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் நடைமுறை உதவியுடன் கற்றுத்தரப்படுகின்றன.
சிறிய முதலீட்டில் மைக்ரோ கிரீன் தொழிலை தொடங்கலாம். 2,000 முதல் 5,000 ரூபாய் முதலீட்டில் வீட்டிலேயே ஆரம்பித்து, பெரிய அளவில் தேவைக்கு ஏற்ப விரிவாக்கலாம். சரியான சந்தை திட்டமிடலுடன் மாதத்திற்கு ஆயிரங்களில் இருந்து லட்சங்கள் வரை வருமானம் பெற வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
55
ஆர்வம் உள்ள அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ளலாம்.!
பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் முன்பதிவு செய்ய 9488575716 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இடங்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டதால், விரைவாக பதிவு செய்வது முக்கியம். வேளாண்மையிலும், ஸ்டார்ட்அப் திட்டங்களிலும் ஆர்வம் உள்ள அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ளலாம்.