Job Alert: 12th முடித்தவர்களுக்கு ஜாக்பாட்.! கைநிறைய சம்பளத்துடன் மத்திய அரசு வேலை.! செம சான்ஸ்.!

Published : Jan 05, 2026, 06:58 AM IST

மத்திய அரசின் ஆதார் சேவை மையங்களில் ஆபரேட்டர்/சூப்பர்வைசர் பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. +2, ஐடிஐ, அல்லது பாலிடெக்னிக் படித்தவர்கள் இந்த வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம், 

PREV
13
நல்ல வேலை.! நல்ல சம்பளம்.!

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் ஆதார் சேவை மையங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. +2 படித்தவர்களுக்கும், ஐடிஐ / பாலிடெக்னிக் முடித்தவர்களுக்கும் சிறந்த வேலை வாய்ப்பாக இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் தருமபுரி, நீலகிரி, விருதுநகர் மாவட்டங்களில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால், அந்த மாவட்ட இளைஞர்களுக்கு இது பொன்னான சந்தர்ப்பமாக பார்க்கப்படுகிறது. 

23
ஆதார் சேவை மையம் என்றால் என்ன?

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) மூலம் மக்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. புதிய ஆதார் பதிவு, பெயர்/முகவரி/மொபைல் எண் திருத்தம், பயோமேட்ரிக் அப்டேட் போன்ற சேவைகள் அனைத்தும் ஆதார் சேவை மையங்கள் மூலம் வழங்கப்படுகிறது. இந்த மையங்கள் மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் வழிகாட்டுதலின் கீழ் இயங்கி வருகின்றன.

காலிப் பணியிடங்கள் விவரம்

இந்த அறிவிப்பின் படி, நாடு முழுவதும் 282 ஆதார் ஆபரேட்டர் / சூப்பர்வைசர்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

மாநில வாரியான காலிப் பணியிடங்கள்

  • தமிழ்நாடு – 3 இடங்கள்
  • ஆந்திரப் பிரதேசம் – 4 இடங்கள்
  • கர்நாடகம் – 10 இடங்கள்
  • கேரளம் – 11 இடங்கள்
  • தெலங்கானா – 11 இடங்கள்
  • புதுச்சேரி – 1 இடம்
  • தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள்:
  • தருமபுரி – 1
  • நீலகிரி – 1
  • விருதுநகர் – 1 
33
கல்வித் தகுதி

ஆதார் சேவை மையத்தில் ஆபரேட்டர் / சூப்பர்வைசர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட தகுதிகளில் ஏதேனும் ஒன்றை பெற்றிருக்க வேண்டும்:

  •  12ஆம் வகுப்பு தேர்ச்சி
  • 10ஆம் வகுப்பு + 2 ஆண்டுகள் ஐடிஐ
  • 10ஆம் வகுப்பு + 3 ஆண்டுகள் பாலிடெக்னிக் டிப்ளமோ
  • அடிப்படை கணினி அறிவு அவசியம்

முக்கியமான கூடுதல் நிபந்தனைகள்

விண்ணப்பதாரர்கள் UIDAI அங்கீகரிக்கப்பட்ட ஆதார் ஏஜென்சி மூலம் பெற்ற சான்றிதழ் (Aadhaar Operator/Supervisor Certificate) வைத்திருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது: 18 வயதுபூர்த்தி செய்திருக்க வேண்டும்.

தேர்வு முறை: கல்வித் தகுதி மற்றும் கணினி திறன் அடிப்படையில் நேர்காணல்  மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம் விவரம்

இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு:

மாத சம்பளம்: ரூ.20,000 வரை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு சார்ந்த சேவை மையத்தில் நிரந்தர அனுபவம் கிடைப்பது கூடுதல் பலனாகும்.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட படிகளை பின்பற்ற வேண்டும்:

1.  www.csc.gov.in, என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்

2. Aadhaar Operator / Supervisor Recruitment பகுதியை தேர்வு செய்யவும்

3. பெயர், மொபைல் எண், கல்வித் தகுதி விவரங்களை பதிவு செய்யவும்

4. விண்ணப்ப கட்டணம் ரூ.20 செலுத்தவும்

* UPI / Debit Card / Credit Card மூலம் செலுத்தலாம்

5. விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்

விண்ணப்பிக்க கடைசி தேதி

ஜனவரி 31, 2026

இந்த தேதிக்குள் கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆதார் சேவை மையங்களில் வேலை என்பது மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் கிடைக்கும் ஒரு நம்பகமான வேலை வாய்ப்பு. குறைந்த கல்வித் தகுதியுடன், நிலையான மாத வருமானம் கிடைக்கும் இந்த வாய்ப்பை தவற விடாமல், தகுதியுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பாக தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள 3 இடங்களுக்கு போட்டி அதிகமாக இருக்கும் என்பதால், விரைவாக அப்ளை செய்வது நல்லது.

Read more Photos on
click me!

Recommended Stories