சென்னையில் உள்ள புகழ்பெற்ற திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் 10 நிரந்தர காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ரூ.58,600 வரை சம்பளம் வழங்கப்படும்.
நிம்மதியான வேலை, சந்தோஷமான சூழல் மகிழ்ச்சியான சம்பளம் வேண்டுமா?. கண்டிப்பாக அது உங்களுக்குதான். சென்னையில் மிகவும் புகழ்பெற்ற ஆன்மீகத் தலங்களில் ஒன்றான திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது. இக்கோயிலில் இளநிலை உதவியாளர் முதல் சமையல் உதவியாளர் வரை மொத்தம் 10 நிரந்தர பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழக அரசுப் பணியில் சேர விரும்பும் தகுதியான இந்து மதத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
25
பணியிடங்கள் மற்றும் தகுதிகள்!
தமிழ் தெரிந்தால் போதும் கண்டிப்பா உங்களுக்கு இந்த வேலை கிடைக்கும். இந்த அறிவிப்பின்படி, இளநிலை உதவியாளர் மற்றும் வசூல் எழுத்தர் ஆகிய பதவிகளுக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அலுவலக உதவியாளர் பணிக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சியும், காவலர் பணிக்குத் தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருப்பதும் அவசியமாகும். மேலும், வேத பாடசாலையில் பயின்றவர்களுக்கு வேத பாராயணம் பணியிலும், பாரம்பரிய முறையில் கோவில் பிரசாதம் தயாரிக்கத் தெரிந்தவர்களுக்கு உதவி சுயம்பாகம் பணியிலும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 45 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
35
சம்பள விவரம் தெரியுமா?!
கைநிறைய சம்பளம் கிடைக்கும் என்பதால் இந்த வேலை ஊள்ளூரில் உள்ளவர்களுக்கு நல்ல சான்ஸ். தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு தமிழக அரசு விதிகளின்படி சிறப்பான ஊதியம் வழங்கப்படுகிறது. இளநிலை உதவியாளர் மற்றும் வசூல் எழுத்தர் பதவிகளுக்கு ரூ. 18,500 முதல் ரூ. 58,600 வரையிலும், அலுவலக உதவியாளர் மற்றும் காவலர் பணிகளுக்கு ரூ. 15,900 முதல் ரூ. 50,400 வரையிலும் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஒரு அரசு சார்ந்த பணி என்பதால், காலப்போக்கில் ஊதிய உயர்வு மற்றும் இதர சலுகைகளும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பணியிடங்களுக்கு ஆஃப்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் https://thiruvottiyurvadivudaiamman.hrce.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்விச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் நகல் மற்றும் குடும்ப அட்டை நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும். சுய முகவரி இடப்பட்ட உறையில் தகுந்த அஞ்சல் தலை ஒட்டி, உதவி ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை – 600019 என்ற முகவரிக்கு ஜனவரி 30, 2026 மாலை 5:45 மணிக்குள் கிடைக்குமாறு அஞ்சல் வழியாகவோ அல்லது நேரிடையாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
55
நீங்க சென்னையா அப்ப உங்களுக்கு ஜாக்பாட்.!
ஆன்மீகப் பணியுடன் கூடிய அரசுப் பணியைத் தேடிக்கொண்டிருக்கும் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்ட மக்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாகும். தகுதியுடையவர்கள் கடைசி நாள் வரை காத்திருக்காமல் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.