அட்ரா சக்கை! 2026 வருஷம் ஃபுல்லா லீவு தானா? மாணவர்களே.. நோட் பண்ணிக்கோங்க.. செம குட் நியூஸ்!

Published : Jan 01, 2026, 09:00 AM IST

School Holidays 2026 ஆம் ஆண்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு விடுமுறை மழையை அள்ளித் தரவுள்ளது. சுற்றுலா செல்ல ஏற்ற நீண்ட விடுமுறை நாட்களின் முழு பட்டியல் இதோ.

PREV
16
school holidays 2026 - விடுமுறைகளின் வருடம்

பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் அலுவலகப் பணி நிமித்தமாக வெளியூரில் தங்கியிருப்பவர்கள் வரை அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது. வரப்போகும் 2026 ஆம் ஆண்டு, விடுமுறைகளைத் திட்டமிடுவதற்கு ஏற்ற ஒரு சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது. வார இறுதி நாட்களுடன் (Weekends) அரசு மற்றும் பண்டிகை விடுமுறைகள் இணைந்து வருவதால், இந்த ஆண்டில் பல முறை தொடர்ச்சியான நீண்ட விடுமுறைகளை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

26
ஜனவரி: ஆண்டின் தொடக்கமே அமர்க்களம்

ஆண்டின் முதல் மாதமான ஜனவரியிலேயே விடுமுறை கொண்டாட்டங்கள் தொடங்கிவிடுகின்றன. ஜனவரி 1 (வியாழன்) புத்தாண்டு முதல் ஜனவரி 4 (ஞாயிறு) வரை ஒரு நீண்ட விடுமுறையைத் திட்டமிடலாம். அதனைத் தொடர்ந்து, தமிழர்களின் திருநாளான பொங்கலையொட்டி ஜனவரி 14 (புதன்) முதல் ஜனவரி 18 (ஞாயிறு) வரை 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. மேலும், குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 24 (சனி) முதல் 26 (திங்கள்) வரை மூன்று நாட்கள் விடுமுறை உள்ளது.

36
பிப்ரவரி & மார்ச்: தேர்வுக்கு நடுவே குட்டி ரிலாக்ஸ்

பிப்ரவரி மாதத்தில் பெரிய அரசு விடுமுறைகள் இல்லாவிட்டாலும், பிப்ரவரி 13 (வெள்ளி) முதல் 15 (ஞாயிறு) வரை காதலர் தின வார இறுதி விடுமுறையாக அமைந்துள்ளது. மார்ச் மாதத்தில், பிப்ரவரி 28 (சனி) முதல் மார்ச் 3 (செவ்வாய்) வரை ஹோலி பண்டிகையை ஒட்டி விடுமுறை திட்டமிடலாம். மார்ச் 19 உகாதி பண்டிகையை முன்னிட்டு வியாழன் முதல் ஞாயிறு வரையும், மார்ச் 26 ராம நவமியை முன்னிட்டு வியாழன் முதல் ஞாயிறு வரையும் விடுமுறை எடுத்துச் சுற்றுலா செல்ல வாய்ப்புகள் உள்ளன.

46
ஏப்ரல் & மே: தமிழ்ப் புத்தாண்டு முதல் மே தின கொண்டாட்டம் வரை

ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் குட் ஃபிரைடே மற்றும் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 3 (வெள்ளி) முதல் 5 (ஞாயிறு) வரை விடுமுறை உள்ளது. அடுத்து, ஏப்ரல் 11 (சனி) முதல் 14 (செவ்வாய்) வரை தமிழ் வருடப்பிறப்புடன் இணைந்த நீண்ட விடுமுறை கிடைக்கிறது. மே மாதத்தில், மே 1 (வெள்ளி) உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மே 3 (ஞாயிறு) வரை மூன்று நாட்கள் ஓய்வு எடுக்கலாம். ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பெரிய அளவில் தொடர் விடுமுறைகள் இல்லை.

56
ஆகஸ்ட் & செப்டம்பர்: பண்டிகைகளால் நிரம்பும் மாதங்கள்

சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 சனிக்கிழமை வந்தாலும், ஆகஸ்ட் 14 (வெள்ளி) விடுப்பு எடுத்தால் மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கும். ஆகஸ்ட் 28 (வெள்ளி) ரக்ஷா பந்தன் வருவதால் ஞாயிறு வரை விடுமுறை உள்ளது. செப்டம்பர் மாதத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு செப்டம்பர் 4 (வெள்ளி) முதல் 6 (ஞாயிறு) வரையும், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 14 (திங்கள்) விடுப்பு எடுத்தால் 16 (புதன்) வரையும் விடுமுறையைத் திட்டமிடலாம்.

66
அக்டோபர் முதல் டிசம்பர் வரை: தீபாவளி, கிறிஸ்துமஸ் விடுமுறை மழை

அக்டோபரில் காந்தி ஜெயந்தியை ஒட்டி அக்டோபர் 2 (வெள்ளி) முதல் 4 (ஞாயிறு) வரை விடுமுறை கிடைக்கிறது. ஆயுத பூஜை மற்றும் விஜய தசமியை முன்னிட்டு அக்டோபர் 17 (சனி) முதல் 20 (செவ்வாய்) வரை நீண்ட விடுமுறை உள்ளது. நவம்பரில் தீபாவளி ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 6) வருகிறது. எனவே வெள்ளி அல்லது திங்கள் விடுப்பு எடுத்தால் 4 நாட்கள் கொண்டாடலாம். ஆண்டின் இறுதியில், கிறிஸ்துமஸ் பண்டிகை வெள்ளிக்கிழமை (டிசம்பர் 25) வருவதால், ஞாயிறு வரை தொடர் விடுமுறையுடன் 2026 ஆம் ஆண்டு நிறைவடைகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories