பஞ்சாப் & சிந்து வங்கி, 'Local Bank Officer' பணிக்காக 145 காலியிடங்களை அறிவித்துள்ளது, இதில் 65 இடங்கள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. வங்கி அனுபவம் உள்ள பட்டதாரிகள், சொந்த ஊரிலேயே நல்ல சம்பளத்துடன் பணியாற்ற இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
வேலை தேடுவோருக்கு ஒரு நிம்மதியான செய்தி காத்திருக்கு என்றால் அது மிகையல்ல. இன்றைய காலத்தில் நிலையான வேலை, நல்ல சம்பளம், சமூக மரியாதை – இந்த மூன்றையும் ஒரே நேரத்தில் தரக்கூடிய துறையாக வங்கித் துறை திகழ்கிறது. குறிப்பாக அரசுத்துறை வங்கிகளில் வேலை செய்வது பல இளைஞர்களின் கனவாக உள்ளது. அதிலும், சொந்த ஊரிலேயே பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தால், அது இன்னும் சிறப்பானதாக மாறுகிறது. அந்த வகையில், Punjab & Sind Bank வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு, தமிழக இளைஞர்களுக்கு மிகப்பெரிய சந்தர்ப்பமாக உள்ளது. ‘Local Bank Officer’ பணியிடங்களுக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு, வங்கி அனுபவம் கொண்ட பட்டதாரிகளுக்கு ஒரு வலுவான தொழில் வளர்ச்சி பாதையை உருவாக்குகிறது. வேலை தேடும் இளைஞர்கள் தாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
27
பணியிட விவரங்கள்.!
இந்த அறிவிப்பின் படி, மொத்தமாக 145 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க வகையில் தமிழ்நாட்டிற்கு மட்டும் 65 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசு வேலைக்கு காத்திருப்போருக்கு இது ஜாக்பாட் ஆகும். இது ஒப்பந்த அடிப்படையிலான பணியாக இருந்தாலும், சம்பளம் மற்றும் சலுகைகள் அரசுத்துறை வங்கி தரத்திலேயே வழங்கப்படுகின்றன என்பதால் வேலை தேடும் இளைஞர்களுக்கு பொன்னான வாய்ப்பாகும். இதனால், பணியில் நம்பிக்கை மற்றும் நிலைத்தன்மை கிடைக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
37
கல்வித்தகுதி.!
விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். எந்த துறையில் பட்டம் பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கலாம் என்பதால் டிகிரி முடித்து வேலைக்கு காத்திருக்கும் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
பணி அனுபவம்
இந்த பணிக்கு விண்ணப்பிக்க, பட்டப்படிப்பு முடித்த பிறகு ஏதேனும் ஒரு வங்கியில் குறைந்தது 18 மாதங்கள் அதிகாரியாக பணிபுரிந்த அனுபவம் அவசியமாகும். இதன் மூலம், அனுபவமுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. எனவே ஒராண்டு அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.
அரசு விதிமுறைகளின்படி, SC/ST/OBC போன்ற பிரிவினருக்கு வயது தளர்வு வழங்கப்படும். மொழித்திறன்
இந்தப் பணியின் முக்கிய அம்சம் “Local Officer” என்பதால், தமிழ் மொழியில் சரளமாக பேசத் தெரிந்திருக்க வேண்டும் வாசிக்கவும் எழுதவும் திறமை இருக்க வேண்டும். இது வாடிக்கையாளர்களுடன் நேரடி தொடர்பு கொள்ள மிகவும் அவசியமான திறனாகும்.
57
ஊதியம் மற்றும் சலுகைகள்
இந்தப் பணிக்கான மாத சம்பளம்:
₹48,480 முதல் ₹85,920 வரை
DA (Dearness Allowance) HRA (House Rent Allowance) மருத்துவ சலுகைகள் பிற வங்கி நலன்கள் என பல சலுகைகளும் வழங்கப்படும்.
தேர்வு முறை
விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட கட்டங்களின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு ஸ்கிரீனிங், நேர்காணல், மொழித்திறன் தேர்வு ஆகியற்றில் தேர்வாக வேண்டும். இத்தகைய அனைத்து நிலைகளிலும் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் Merit List தயாரிக்கப்பட்டு இறுதி தேர்வு செய்யப்படும்.
67
தேர்வு மையங்கள்
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. Chennai, Coimbatore, Madurai, மற்றும் Tiruchirappalli இல் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். இதனால், விண்ணப்பதாரர்கள் தங்களுக்குச் சுலபமான மையத்தை தேர்வு செய்யலாம்.
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: IBPS அதிகாரப்பூர்வ தளம் கடைசி தேதி: ஏப்ரல் 20, 2026, ஆன்லைன் விண்ணப்பத்தை சரியாக நிரப்பி, தேவையான ஆவணங்களை பதிவேற்றுவது மிக முக்கியம்.
77
வேலை நிச்சயம்.! இது வேத சத்தியம்.!
வங்கித் துறையில் ஏற்கனவே அனுபவம் பெற்றவர்களுக்கு, இந்த அறிவிப்பு ஒரு மிகச் சிறந்த முன்னேற்ற வாய்ப்பாகும். குறிப்பாக தமிழ்நாட்டிலேயே பணிபுரிய விரும்புபவர்களுக்கு இது ஒரு “Golden Opportunity” என்று சொல்லலாம். முறையான திட்டமிடல், தேர்வு தயாரிப்பு மற்றும் நேர்முகத் தேர்வில் தன்னம்பிக்கை ஆகியவற்றுடன் அணுகினால், இந்த வேலைவாய்ப்பை பெறுவது சாத்தியமே அல்ல – நிச்சயமாகும். அதனால், தகுதி மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் உடனே விண்ணப்பிக்கவும். உங்கள் வங்கி கனவு நனவாகும் நாள் இதுவாக இருக்கலாம்!