JEE Main பிப்ரவரி 12-ல் ஜெஇஇ மெயின் 2026 தேர்வு முடிவுகள் வெளியாகிறது. jeemain.nta.nic.in தளத்தில் ஸ்கோர்கார்டை டவுன்லோட் செய்யும் முறை மற்றும் நேரம் இதோ.
JEE Main மாணவர்களே தயாராகுங்கள்! ரிசல்ட் தேதி குறித்தாச்சு!
நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான மிக முக்கியமான நுழைவுத் தேர்வான 'ஜெஇஇ மெயின் 2026' (JEE Main 2026) தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ள தகவலின்படி, ஜனவரி மாதம் நடைபெற்ற செஷன் 1 தேர்வுக்கான முடிவுகள் பிப்ரவரி 12, 2026 (புதன்கிழமை) அன்று வெளியாகவுள்ளது.
25
எந்த நேரத்தில் முடிவுகள் வெளியாகும்?
என்டிஏ அதிகாரப்பூர்வமாக தேதியை அறிவித்திருந்தாலும், முடிவுகள் வெளியாகும் சரியான நேரத்தைக் குறிப்பிடவில்லை. கடந்த ஆண்டுகளைப் பார்க்கும்போது, பெரும்பாலும் மதிய நேரத்திலோ அல்லது மாலையிலோ தேர்வு முடிவுகள் இணையதளத்தில் பதிவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடர்ந்து கண்காணிப்பது அவசியம்.
35
தேர்வு நடந்த நாட்கள் மற்றும் கடினத்தன்மை
ஜெஇஇ மெயின் 2026 செஷன் 1 தேர்வுகள் ஜனவரி 21 முதல் ஜனவரி 28 வரை நடைபெற்றன. பி.இ (B.E) மற்றும் பி.டெக் (B.Tech) படிப்புகளுக்கான இந்தத் தேர்வில், இயற்பியல் மற்றும் வேதியியல் பிரிவுகள் மிதமான கடினத்தன்மையுடன் இருந்ததாகவும், கணிதப் பிரிவு சில ஷிப்டுகளில் சற்று கடினமாக இருந்ததாகவும் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இப்போது வெளியாவது செஷன் 1 தேர்வுக்கான மதிப்பெண்கள் மற்றும் பர்சென்டைல் மட்டுமே. ஜெஇஇ அட்வான்ஸ்டு (JEE Advanced) தேர்வுக்குத் தகுதி பெறுவதற்கான இறுதி 'கட்-ஆஃப்' (Cut-off) மதிப்பெண்கள், ஏப்ரல் மாதம் நடைபெறும் இரண்டாவது செஷன் (Session 2) முடிவுகளுக்குப் பின்னரே அறிவிக்கப்படும். இரண்டு செஷன்களிலும் மாணவர்கள் பெற்ற சிறந்த மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
55
ஸ்கோர்கார்டு டவுன்லோட் செய்வது எப்படி?
1. jeemain.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
2. முகப்புப் பக்கத்தில் "JEE Main 2026 Session 1 Result" என்ற லிங்க் ஆக்டிவேட் ஆனதும் அதை கிளிக் செய்யவும்.
3. உங்கள் விண்ணப்ப எண் (Application Number) மற்றும் பிறந்த தேதியை (Date of Birth) உள்ளிடவும்.
4. திரையில் தோன்றும் ஸ்கோர்கார்டை சரிபார்த்து டவுன்லோட் செய்து கொள்ளவும்.
மாணவர்களே, உங்கள் கடின உழைப்பிற்கான பலன் கிடைக்க வாழ்த்துகள்!