டிகிரி முடித்தவர்களுக்கு இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் அசத்தலான வேலை வாய்ப்புகள்! உடனே விண்ணப்பிக்கவும்

Published : Apr 11, 2025, 04:49 AM IST

இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் (ஐடிடிசி) உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பட்டதாரிகள் ஏப்ரல் 30, 2025-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி, சம்பளம் மற்றும் விண்ணப்பிக்கும் முறையை அறியவும்.

PREV
17
டிகிரி முடித்தவர்களுக்கு இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் அசத்தலான வேலை வாய்ப்புகள்! உடனே விண்ணப்பிக்கவும்

இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (ITDC) தற்போது பல்வேறு உதவியாளர் பணியிடங்களை நிரப்பத் தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. மத்திய அரசுப் பணியை எதிர்நோக்கியிருக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும். நாடு முழுவதும் பணியாற்றக்கூடிய இந்த வேலைவாய்ப்புக்கு யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், என்னென்ன தகுதிகள் தேவை, எப்படி விண்ணப்பிப்பது போன்ற முழுமையான விவரங்களை இப்பொழுது பார்க்கலாம்.

27

நிறுவனம்: இந்திய சுற்றுலா வளர்ச்சி கழகம் (ITDC)

வேலை வகை: மத்திய அரசு வேலை

மொத்த காலியிடங்கள்: 08

பணியிடம்: இந்தியா முழுவதும்

விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 09.04.2025

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.04.2025

காலியிடங்கள் மற்றும் கல்வித் தகுதி:

37

1. பணியின் பெயர்: Junior Assistant (Accounts)

  • சம்பளம்: மாதம் 19,970 – 71,610/-
  • காலியிடங்கள்: 06
  • கல்வி தகுதி: வணிகவியலில் (B.Com) பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் நிதி மற்றும் கணக்குகள் பிரிவில் குறைந்தபட்சம் ஒரு வருட பணி அனுபவம் அவசியம்.
  • 2022 அல்லது 2023 அல்லது 2024 ஆகிய ஆண்டுகளில் SSC நடத்திய Combined Graduate Level Examination (CGL) Tier-1 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • வயது வரம்பு: 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
47

2. பணியின் பெயர்: Counter Assistant

  • சம்பளம்: மாதம் 19,970 – 71,610/-
  • காலியிடங்கள்: 02
  • கல்வி தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் சுற்றுலா / பயண ஏற்பாடுகள் / விமான டிக்கெட் முன்பதிவு ஆகியவற்றில் குறைந்தபட்சம் ஒரு வருட பணி அனுபவம் அவசியம்.
  • 2022 அல்லது 2023 அல்லது 2024 ஆகிய ஆண்டுகளில் SSC நடத்திய Combined Graduate Level Examination (CGL) Tier-1 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • வயது வரம்பு: 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
57

விண்ணப்பக் கட்டணம்:

  • பொதுப் பிரிவினர் (GEN) / பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் (EWS) / இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) – 500/-
  • எஸ்.சி / எஸ்.டி / மாற்றுத்திறனாளிகள் (PWD) – கட்டணம் இல்லை

இதையும் படிங்க: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் சூப்பர் வாய்ப்பு! 527 காலியிடங்கள்! தேர்வே இல்லை!

67

தேர்வு முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 09.04.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.04.2025
77

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://itdc.co.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய குறிப்பு: விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகுதிகளையும் கவனமாகப் படித்து உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://intranet.itdc.co.in/JobDocuments/16b90c18-72fc-48eb-ade1-dfa4fc0a4173.pdf

ஆகவே, தகுதியுள்ள அனைவரும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் பணியில் சேர விரைந்து விண்ணப்பியுங்கள்! கடைசி தேதி நெருங்கி வருவதால் தாமதிக்க வேண்டாம்!

இதையும் படிங்க: ரூ. 1.7 இலட்சம் சம்பளம்: 10th , 12th , டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசில் செம வேலை!

Read more Photos on
click me!

Recommended Stories