ஐடிஐ படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம்! எங்கே? எப்போது? முழுவிவரம்...

Published : Apr 10, 2025, 07:12 PM IST

ஐடிஐ படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் ஏப்ரல் 15, 2025 அன்று நடைபெறுகிறது. முன்னணி நிறுவனங்கள் ஆட்சேர்ப்பு செய்கின்றன! தகுதி, இடம் மற்றும் தேவையான ஆவணங்களை பார்க்கவும்.

PREV
14
ஐடிஐ படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம்! எங்கே? எப்போது? முழுவிவரம்...

ஐடிஐ படித்த இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் ஒரு அற்புதமான செய்தி! ஏப்ரல் 15, 2025 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பிரமாண்ட வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமிற்கு பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

24

முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு:

இந்த வேலை வாய்ப்பு முகாமில் மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் மட்டுமின்றி, தனியார் துறையைச் சேர்ந்த பல முன்னணி நிறுவனங்களும் பங்கேற்க உள்ளன. தங்களது நிறுவனங்களுக்கு தேவையான திறமையான இளைஞர்களையும், பெண்களையும் தேர்வு செய்ய நிறுவனங்கள் நேரடியாக வர இருக்கின்றன. ஐடிஐ படித்தவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு!

34

யார் யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்?

ஐடிஐ பயிற்சி முடித்த அனைவரும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம்.

கலந்து கொள்ள தேவையான ஆவணங்கள்:

வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள், சில முக்கியமான ஆவணங்களை எடுத்து வருவது அவசியம்.

  • பயின்ற கல்வி நிலையத்தில் தேர்ச்சி பெற்ற சான்றிதழ்
  • 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
  • சாதி சான்றிதழ்
  • ஆதார் அடையாள அட்டை
  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
44

மேலும் தகவலுக்கு:

இந்த வேலை வாய்ப்பு முகாம் குறித்து மேலும் விவரங்கள் ஏதும் தேவைப்பட்டால், திருநெல்வேலி பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்திற்கு எதிரில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 0462-2342432, 9499055790 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் மரு. இரா.சுகுமார், இ.ஆ.ப., அவர்கள் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ரூ. 1.7 இலட்சம் சம்பளம்: 10th , 12th , டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசில் செம வேலை!

Read more Photos on
click me!

Recommended Stories