இந்திய ஐடி துறையில், இன்போசிஸ் தனது AI First திட்டத்தின் கீழ் செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட பொறியியல் பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 21 லட்சம் வரை தொடக்க சம்பளம் வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையில் நீண்ட காலமாக நிலவி வந்த குறைந்த ஆரம்பக்கட்ட சம்பளம் குறித்த கவலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, முன்னணி நிறுவனமான இன்போசிஸ் ஒரு பிரம்மாண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தனது AI First திட்டத்தின் கீழ், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்பத் திறன்களைக் கொண்ட பொறியியல் பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 21 லட்சம் வரை தொடக்க சம்பளம் வழங்க முன்வந்துள்ளது. இந்த அறிவிப்பு இளைஞர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
2025-ஆம் ஆண்டு படிப்பை முடிக்கும் மாணவர்களுக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய புத்தாண்டு பொங்கல் பரிசாக இது பார்க்கப்படுகிறது.
24
நினைத்தே பார்க்க முடியாத சம்பளம்.!
கடந்த பத்தாண்டுகளாக ஐடி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளின் சம்பளம் 800 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்த நிலையில், ஆரம்பக்கட்ட ஊழியர்களின் சம்பளம் மிக மெதுவாகவே உயர்ந்து வந்தது. இந்த இடைவெளியை குறைக்கும் வகையில், இன்போசிஸ் தற்போது தனது சம்பள விகிதங்களை அதிரடியாக மாற்றியமைத்துள்ளது. குறிப்பாக, ஸ்பெஷலிஸ்ட் புரோகிராமர் பிரிவில் பணியமர்த்தப்படும் எல்-3 (L3) நிலை பயிற்சிப் பணியாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 21 லட்சமும், எல்-2 (L2) நிலைக்கு ரூ. 16 லட்சமும், எல்-1 (L1) நிலைக்கு ரூ. 11 லட்சமும் ஆண்டு வருமானமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் ஐடி துறையில் புதிய அத்தாயம் பிறப்பதாக கூறப்படுகிறது. இளைஞர்கள் சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கின்றனர்.
34
20,000 புதியவர்களை பணியமர்த்த இன்போசிஸ் இலக்கு
இந்த நடப்பு நிதியாண்டில் மட்டும் சுமார் 20,000 புதியவர்களை பணியமர்த்த இன்போசிஸ் இலக்கு வைத்துள்ளது. இதில் முதற்கட்டமாக 12,000 பேர் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள இடங்களை அடுத்த சில மாதங்களில் நிரப்ப அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக விரைவில் வளாகத்திற்கு வெளியே ஆள்சேர்ப்பு முகாம்களை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பி.இ, பி.டெக், எம்.இ, எம்.டெக், எம்.சி.ஏ மற்றும் கணினி அறிவியல் சார்ந்த எம்.எஸ்.சி பட்டதாரிகள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் நிலவும் கடும் போட்டிக்கு மத்தியில், திறமையான இளைஞர்களை கவரும் வகையில் இன்போசிஸ் எடுத்துள்ள இந்த முடிவு மற்ற ஐடி நிறுவனங்களையும் இது போன்ற சம்பள உயர்வை வழங்க தூண்டும் என்றால் அது மிகயல்ல. டிஜிட்டல் ஸ்பெஷலிஸ்ட் இன்ஜினியர் பணிகளுக்குக் குறைந்தபட்சமாக ரூ. 7 லட்சம் முதல் சம்பளம் தொடங்குகிறது என்பதால் இது இளைஞர்களுக்கான ஜாக்பாட். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இன்போசிஸ் நிறுவனத்தின் இணையதளப் பக்கத்தில் கூடுதல் விவரங்களை அறிந்து விண்ணப்பிக்கலாம்.