Job Alert: பட்டதாரிகளுக்கு பொற்கால வாய்ப்பு.! ரயில்வே அமைச்சக பிரிவுகளில் 311 காலிப்பணியிடங்கள்.! விண்ணப்பிப்பது எப்படி.?!

Published : Dec 30, 2025, 09:09 AM IST

இந்திய இரயில்வே வாரியம் (RRB), அமைச்சக மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவுகளில் 311 காலியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பை (CEN 08/2025) வெளியிட்டுள்ளது. ஜூனியர் டிரான்ஸ்லேட்டர், சட்ட உதவியாளர் போன்ற பதவிகளுக்கு 2025 டிசம்பர் 30 முதல் விண்ணப்பிக்கலாம். 

PREV
14
புதிய அறிவிப்பு, புதிய வேலை

இந்திய இரயில்வே வாரியம் (RRB), அமைச்சகப் பிரிவுகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவுகளில் (Ministerial and Isolated Categories) காலியாக உள்ள 311 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை (CEN 08/2025) வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் கீழ் ஜூனியர் டிரான்ஸ்லேட்டர் (ஹிந்தி), சட்ட உதவியாளர் (Chief Law Assistant), பணியாளர் நல ஆய்வாளர் (Staff & Welfare Inspector) மற்றும் ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் நிரப்பப்பட உள்ளன. மத்திய அரசுப் பணியில் சேர விரும்பும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், இதற்கான இணையதளப் பதிவு தொடங்கும் நாளிலிருந்து விண்ணப்பிக்கத் தயாராகலாம்.

24
விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு

இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு 2025 டிசம்பர் 30-ஆம் தேதி தொடங்கி, 2026 ஜனவரி 29-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், பதவியைப் பொறுத்து அதிகபட்சம் 30 முதல் 40 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, எஸ்சி/எஸ்டி (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி (OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படும்.

34
கல்வித் தகுதி இதுதான்

கல்வித் தகுதியைப் பொறுத்தவரை, விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 12-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது சம்பந்தப்பட்ட துறைகளில் இளங்கலை/முதுகலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். குறிப்பாக ஜூனியர் டிரான்ஸ்லேட்டர் போன்ற பதவிகளுக்கு மொழிபெயர்ப்புத் திறனும், தட்டச்சு தொடர்பான பதவிகளுக்கு குறிப்பிட்ட வேகத்தில் தட்டச்சு செய்யும் திறனும் அவசியமாகும். தேர்வு முறையானது கணினி வழித் தேர்வு (CBT), அதனைத் தொடர்ந்து திறன் தேர்வு மற்றும் இறுதிச் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகிய நிலைகளில் நடைபெறும்.

44
விண்ணப்பக் கட்டணம் விவரம்

விண்ணப்பக் கட்டணமாகப் பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 500 ரூபாயும், எஸ்சி/எஸ்டி, பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு 250 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு விதிகளின்படி குறிப்பிட்ட தொகை மீண்டும் வங்கி கணக்கில் செலுத்தப்படும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் rrbapply.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories