இந்திய கடற்படையில் வேலை! பிளஸ் 2 முடித்த ஆண்கள் உடனே விண்ணப்பிக்கவும்…

Published : Apr 11, 2025, 05:35 AM IST

இந்திய கடற்படையில் மருத்துவப் பிரிவில் மருத்துவ உதவியாளர் பணிகளுக்கு பிளஸ் 2 அறிவியல் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்ற ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.

PREV
16
இந்திய கடற்படையில் வேலை! பிளஸ் 2 முடித்த ஆண்கள் உடனே விண்ணப்பிக்கவும்…

இந்திய கடற்படையில் பணியாற்ற விரும்பும் இளைஞர்களுக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு! இந்திய கடற்படையின் மருத்துவப் பிரிவில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர் (Sailors (SSR Medical) 02/2025-26 பிரிவு) பணியிடங்களுக்கு தகுதியான ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிளஸ் 2 முடித்த இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி கடற்படையில் சேரலாம்.

26

பணியின் பெயர்: Sailors (SSR Medical) 02/2025-26 பிரிவு

சம்பளம்: பயிற்சிக்குப் பின் மாதம் ₹ 21,700 - 69,100

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் கணிதம் (Mathematics), இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry), உயிரியல் (Biology) ஆகிய பாடங்கள் அடங்கிய அறிவியல் பாடப்பிரிவில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தற்போது பிளஸ் 2 இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

36

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 01.09.2004-க்கும் 29.02.2008-க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்திய கடற்படையால் நடத்தப்படும் பின்வரும் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்:

  • INET (Indian Navy Entrance Test): இது ஆன்லைன் முறையில் நடைபெறும் எழுத்துத் தேர்வு ஆகும்.
  • உடற்தகுதித் தேர்வுகள்: உயரம் மற்றும் எடை உள்ளிட்ட உடல் அளவீடுகள் மற்றும் உடற்திறன் தேர்வுகள் நடத்தப்படும்.
  • மருத்துவத் தகுதித் தேர்வு: கடற்படையின் மருத்துவத் தகுதி விதிகளின்படி மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
46

உடல் தகுதி:

  • உயரம்: குறைந்தபட்சம் 157 செ.மீ. இருக்க வேண்டும்.
  • எடை: உயரத்திற்கேற்ற சரியான எடை இருக்க வேண்டும்.
  • உடல் ஆரோக்கியம்: விண்ணப்பதாரர் நல்ல ஆரோக்கியமான உடற்தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.

உடற்திறன் தேர்வு விவரங்கள்:

  • 1.6 கிலோ மீட்டர் தூரத்தை 6½ நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும்.
  • 20 ஸ்குவாட்ஸ் (Squats) எடுக்க வேண்டும்.
  • 15 புஷ்-அப்ஸ் (Push-ups) எடுக்க வேண்டும்.
  • 15 சிட்-அப்ஸ் (Sit-ups) எடுக்க வேண்டும்.
56

எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்:

எழுத்துத் தேர்வில் ஆங்கிலம் (English), கணிதம் (Mathematics), அறிவியல் (Science), பொது அறிவு (General Knowledge) ஆகிய பாடங்களிலிருந்து கொள்குறி வகை (Multiple Choice Questions) கேள்விகள் கேட்கப்படும். இந்த எழுத்துத் தேர்வு மற்றும் இதர தேர்வுகள் மே மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறும். இது குறித்த விரிவான தகவல்கள் தகுதியானவர்களுக்கு அட்மிட் கார்டு மூலம் தெரிவிக்கப்படும்.

தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு ஒடிசா மாநிலத்தில் உள்ள Chilka கடற்படை பயிற்சி மையத்தில் பயிற்சி வழங்கப்படும். பயிற்சி வெற்றிகரமாக முடித்த பின் பணியமர்த்தப்படுவர்.

66

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் ₹ 60 மட்டும். இந்த கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ள மற்றும் தகுதியான ஆண் விண்ணப்பதாரர்கள் இந்திய கடற்படையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.joinindiannavy.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 16.04.2025

மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களை அறிய http://sailornavy.cdac.in/ssrmedcycle1/notifications/Advt_SSR_Med_02_2025_English.pdf என்ற இணையதள முகவரியைப் பார்வையிடவும். கடற்படையில் பணியாற்ற ஆர்வமுள்ள பிளஸ் 2 முடித்த ஆண்கள் இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் உடனே விண்ணப்பிக்கவும்! தேசப்பணியாற்ற இது ஒரு சிறந்த களம்!

இதையும் படிங்க: 12வது பாஸ் பண்ணிட்டீங்களா? மத்திய அரசு வேலை ரெடி! மிஸ் பண்ணாதீங்க!

Read more Photos on
click me!

Recommended Stories