TNPSC : குட் நியூஸ் வந்தாச்சு.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - முழு விபரம்

First Published Jun 2, 2023, 6:43 PM IST

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சிவில் நீதிபதி பதவியில் 246 காலியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு, வரும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் பி. உமா மகேஸ்வரி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, “தமிழ்நாடு நீதித்துறை பணியின்கீழ் வரும் சிவில் நீதிபதி பதவியில் 246 காலியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான முதல்கட்ட தேர்வான முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் 19 ஆம் தேதியும், முதன்மை எழுத்துத் தேர்வு அக்டோபர் 28 மற்றும் 29 ஆம் தேதிகளிலும் நடைபெறும்.

முதல்நிலை தேர்வுக்கு புதிதாக இளங்கலை பட்டப்படிப்பை முடித்தவர்கள், நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.  சட்ட பட்டதாரிகளுக்கு வயது வரம்பு 22 முதல் 29 வரை. வழக்கறிஞர்களுக்கு 25 முதல் 37 வரை (இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 42 வயது வரை) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையவர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www. tnpsc. gov. in) ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க..ஜூன் மாதத்தில் 12 நாட்கள் வங்கி விடுமுறை.. தமிழகத்தில் எத்தனை நாள் தெரியுமா?

click me!