HCL நிறுவனத்தில் அருமையான வேலை வாய்ப்பு - முழு விபரம்

Published : May 27, 2023, 01:27 PM IST

தாட்கோ மூலம் எச்.சி.எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் பட்டப்படிப்புக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
14
HCL நிறுவனத்தில் அருமையான வேலை வாய்ப்பு - முழு விபரம்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) நிறுவனமானது HCL நிறுவனத்தில் 12 ஆம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களுக்கு HCL Technologies–ல் வேலைவாய்ப்புடன் இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள புகழ்வாய்ந்த பிட்ஸ்பிலானி கல்லூரியில் B. Sc (கணினி வடிவமைப்பு) BCA பல்கலைக்கழக பட்டப்படிப்பில், BCA பல்கலைக்கழக பட்டப்படிப்பில் /பிபிஏ/பி. காம் மற்றும் நாக்பூரிலுள்ள ஐஐஎம் பல்கலைகழகத்தில் ஒருங்கிணைந்த மேலாண்மை பட்டப்படிப்பு சேர்ந்து படித்திடவும், வாய்ப்பும் பெற்று தரப்படும்.

24

இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பில் 2022 ஆம் ஆண்டு முடித்தவர்கள் 60 சதவீதம் மற்றும் 2023 ஆம் ஆண்டில் முடித்தவர்கள் 75 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ. 3. 00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

34

எச்.சி.எல் மூலம் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும் இப்படிப்பிற்கான செலவீனம் தாட்கோவால் ஏற்கப்படும். இத்திட்டத்தில் ஊதியமாக ரூ. 1, 70, 000/- முதல் ரூ. 2, 20, 000/- வரை பெறலாம். மேலும் திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் ஊதிய உயர்வு பெறலாம்.

44

மேற்கண்ட திட்டத்தில் சேர தாட்கோ இணையதளம் www. tahdco. com என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம், எண்-3, சாலை விநாயகர் கோவில் ரோடு, விருப்பாட்சிப்புரம், தருமபுரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்” என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க..சென்னை - இலங்கைக்கு சூப்பரான கப்பல் பயணம்.. ஒரு டிக்கெட் எவ்வளவு தெரியுமா?

click me!

Recommended Stories