தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியானது. இதனையடுத்து, தமிழகம் முழுவதும் கல்லூரி சேர்க்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பே பல்வேறு தனியார் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை தொடங்கிவிட்டன. இந்நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை கடந்த 8ம் தேதி முதல் துவங்கியது.