மாணவர்களுக்கு 'குட் நியூஸ்! மத்திய, மாநில அரசு தேர்வுகளுக்கு இலவச பயிற்சி - முழு விபரம்

First Published | May 12, 2023, 4:06 PM IST

மத்திய, மாநில அரசு போட்டித்தேர்வுக்கு பயிலும் மாணவா்களுக்கு இலவச பயிற்சி பற்றிய செய்தியை இங்கு காணலாம்.

சேவாபாரதி தமிழ்நாடு எனும் அமைப்பு சாா்பில் இலவச பயிற்சி வழங்க உள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், சேவாபாரதி தமிழ்நாடு எனும் அமைப்பு சாா்பில், 'பாரதி பயிலகம்' எனும் பெயரில் மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுக்கு பயிற்சி அளிக்கிறது.

இதில் வரும் ஜூன் முதல் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோவாணயம் நடத்தும் குரூப்-1 தோவு மற்றும் குடிமைப் பணி தேர்வுகளுக்கு ஓராண்டு ஒருங்கிணைந்த சிறப்புப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

Latest Videos


இந்தப் பயிற்சியில் தமிழ்நாட்டின் பின் தங்கிய மாவட்டத்தை சோந்தவா்களுக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

இதையும் படிங்க..தமிழக காவல்துறையின் எஸ்.ஐ பணியில் சேர விருப்பமா? முழு விபரம்

இரு பாலரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் போது ஓராண்டுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் பயிற்சி என முற்றிலும் இலவசமாக அளிக்கப்படும்.  இதில் சேருவதற்கு மே 25-ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் முழுவிவரத்தை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பித்தவா்களுக்கு நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவா். இது குறித்து கூடுதல் தகவல்களுக்கு 90032 42208 எனும் கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..இந்து சமய அறநிலையத் துறையில் சூப்பர் வேலை.. முழு விபரம்

click me!