பிளஸ் 2 விடைத்தாள் நகல் பதிவிறக்கம், மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு எப்போது தெரியுமா? முழு விபரம்

First Published | May 30, 2023, 7:58 AM IST

பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் மறுகூட்டல், மறு மதிப்பீடு செய்வது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாட்டில், 2023ல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாள் நகலினை இன்று (மே 30) பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து, விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், மேலும் இதே இணையதள முகவரியில் அதற்கான வெற்று விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து, படிவத்தினை பூர்த்தி செய்து, அதனை இரு நகல்கள் எடுத்து நாளை பிற்பகல் முதல் 3ம் தேதி மாலை 5.00 மணிவரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

Latest Videos


புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி. ராணிப்பேட்டை திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பங்களை தேர்வர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல மறுமதிப்பீட்டை பொறுத்தவரை ஒரு பாடத்துக்கு ரூ.500, மறுகூட்டல் II உயிரியல் பாடம் மட்டும் ரூ.305, ஏனையப் பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் ரூ.205 என்றும் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு கடந்த மே 8 ஆம் தேதி வெளியானது. இதில் தமிழகம் முழுவதும் 94 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..ஜூன் மாதத்தில் 12 நாட்கள் வங்கி விடுமுறை.. தமிழகத்தில் எத்தனை நாள் தெரியுமா?

click me!