விமானப்படையில் அக்னிவீர் வேலை! ரூ.10 லட்சம் வரை சம்பளம்.. 12வது படிச்சிருந்தா போதும்!

Published : Jan 12, 2026, 04:13 PM IST

இந்திய விமானப்படை, அக்னிபத் திட்டத்தின் கீழ் 'அக்னிவீர் வாயு 01/2027' சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. 12-ஆம் வகுப்பு முடித்த திருமணமாகாத இளைஞர்கள், நிர்ணயிக்கப்பட்ட வயது மற்றும் கல்வித் தகுதிகளுடன் இந்த வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

PREV
16
அக்னிவீர் வேலைவாய்ப்பு

அக்னிபத் திட்டத்தின் கீழ் 'அக்னிவீர் வாயு 01/2027' சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை இந்திய விமானப்படை வரவேற்கிறது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கத் தொடங்கலாம்.

26
வயது வரம்பு மற்றும் தகுதிகள்

• பிறந்த தேதி: விண்ணப்பதாரர்கள் 01 ஜனவரி 2006 முதல் 01 ஜூலை 2009-க்குள் பிறந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது 21-க்குள் இருக்க வேண்டும்.

• திருமணம்: திருமணமாகாதவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 4 ஆண்டு பணி காலத்தில் திருமணம் செய்யக்கூடாது. பெண் விண்ணப்பதாரர்கள் பணி காலத்தில் கர்ப்பம் தரிக்கக் கூடாது என்ற நிபந்தனையும் உண்டு.

36
கல்வித் தகுதி

• அறிவியல் பிரிவு: 12-ஆம் வகுப்பில் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலம் பயின்று குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். (ஆங்கிலத்தில் மட்டும் 50% அவசியம்). அல்லது சம்பந்தப்பட்ட இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

• இதர பிரிவுகள்: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் 12-ஆம் வகுப்பு முடித்து மொத்தம் 50% மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 50% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

46
சம்பளம் மற்றும் சலுகைகள்

• மாதச் சம்பளம்: முதல் ஆண்டில் ₹30,000-ல் தொடங்கி ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கப்படும்.

• சேவா நிதி: 4 ஆண்டு காலப் பணியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு சுமார் ₹10.04 லட்சம் சேவா நிதி தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

• நிரந்தரப் பணி: சிறப்பாகச் செயல்படும் 25% அக்னிவீரர்கள் விமானப்படையில் நிரந்தரப் பணியாளர்களாகச் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

56
தேர்வு முறை

தேர்வுகள் மூன்று நிலைகளாக நடைபெறும்:

1. ஆன்லைன் எழுத்துத் தேர்வு.

2. உடல் தகுதித் தேர்வு (PFT) மற்றும் அடாப்டபிலிட்டி தேர்வு.

3. மருத்துவப் பரிசோதனை.

66
விண்ணப்பிப்பது எப்படி?

ஆர்வமுள்ளவர்கள் iafrecruitment.edcil.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் என்றும், தகுதியின் அடிப்படையில் மட்டுமே தேர்வுகள் நடக்கும் என்றும் விமானப்படை எச்சரித்துள்ளது.

முக்கிய தேதிகள்:

• பதிவு தொடங்கும் நேரம்: ஜனவரி 12, 2026 (காலை 11 மணி)

• விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 1, 2026 (இரவு 11 மணி)

• தேர்வு நடைபெறும் நாட்கள்: மார்ச் 30 மற்றும் 31, 2026

Read more Photos on
click me!

Recommended Stories