ADA-வில் செம வேலை வாய்ப்பு! ரூ.59,000 வரை சம்பளம்.. டிகிரி படிச்சிருந்தா போதும், ட்ரை பண்ணுங்க!

Published : Jan 11, 2026, 08:11 PM IST

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் ஏஜென்சி (ADA), 43 காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பை அறிவித்துள்ளது. பல்வேறு பதவிகளுக்கு பட்டப்படிப்பு முடித்த தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

PREV
14
ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் ஏஜென்சி

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் ஏஜென்சி (Aeronautical Development Agency - ADA), தற்போது பல்வேறு திட்டப்பணிகளுக்காக தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. மொத்தம் 43 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

24
பணியிடங்கள் மற்றும் சம்பள விவரம்

புராஜெக்ட் அட்மின் ஆபீசர் (PAO): 5 இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான மாதச் சம்பளம் சுமார் ₹59,276 ஆகும்.

புராஜெக்ட் சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் (PSTA): 5 இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான மாதச் சம்பளம் சுமார் ₹50,224 ஆகும்.

புராஜெக்ட் சீனியர் அட்மின் அசிஸ்டெண்ட் (PSAA): 10 இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான மாதச் சம்பளம் சுமார் ₹47,496 ஆகும்.

புராஜெக்ட் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் (PTA): 10 இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான மாதச் சம்பளம் சுமார் ₹35,220 ஆகும்.

புராஜெக்ட் அட்மின் அசிஸ்டெண்ட் (PAA): 13 இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான மாதச் சம்பளம் சுமார் ₹35,220 ஆகும்.

தகுதி மற்றும் வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட துறையில் பட்டப்படிப்பு (Bachelor's Degree) முடித்திருக்க வேண்டும். பல்வேறு பணியிடங்களுக்கு ஏற்ப வயது வரம்பு அதிகபட்சமாக 35 முதல் 50 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.

34
தேர்வு முறை

நிர்வாக உதவியாளர் (PAA, PSAA) பணிகளுக்கு: கணினியில் ஆங்கிலத் தட்டச்சுத் தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் அதனைத் தொடர்ந்து நேர்காணல் நடைபெறும்.

நிர்வாக அதிகாரி (PAO) மற்றும் சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் பணிகளுக்கு: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் பணிக்கு: எழுத்துத் தேர்வு மட்டும் போதுமானது.

44
விண்ணப்பிப்பது எப்படி?

தகுதியுள்ளவர்கள் ADA-வின் அதிகாரப்பூர்வ இணையதளமான ada.gov.in-க்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஜனவரி 29, 2026 கடைசி நாளாகும்.

Read more Photos on
click me!

Recommended Stories