1. Medical Officer – 2 இடங்கள்
தகுதி: எம்பிபிஎஸ்
சம்பளம்: ₹36,700 – ₹1,16,200
2. Staff Nurse – 2 இடங்கள்
தகுதி: ANM / Nursing Diploma
சம்பளம்: ₹18,500 – ₹58,600
3. Nursing Assistant – 2 இடங்கள்
தகுதி: பிளஸ்-2 தேர்ச்சி
சம்பளம்: ₹11,600 – ₹36,800
எல்லா பணியிடங்களுக்கும் அதிகபட்ச வயது வரம்பு 45 ஆண்டுகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்தவிதமான விண்ணப்பக் கட்டணமும் பெறப்படாது.
தேர்வு நடைமுறை
விண்ணப்பங்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்டு, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு அனுப்பப்படும். நேர்முகத் தேர்வின் அடிப்படையிலேயே இறுதி தேர்வு மேற்கொள்ளப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் இணையதளம் melmalayanurangalamman.hrce.tn.gov.in இலிருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களும் இணைக்கப்பட வேண்டும். அனுப்பும் உறையின் மேல் விண்ணப்பிக்கும் பதவியின் பெயர் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி
உதவி ஆணையர் / செயல் அலுவலர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில், மேல்மலையனூர் (ம) வட்டம், விழுப்புரம் – 604 204 விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 24.11.2025