Jobs Alert: ஐடி துறையில் வேலை வேண்டுமா? டீசிஎஸ் அழைக்கிறது.! நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி இதுதான்.!

Published : Nov 17, 2025, 06:31 AM IST

முன்னணி ஐடி நிறுவனமான TCS, சென்னை, பெங்களூரில் டேட்டா நெட்வொர்க் அட்மின் பணிக்காக நவம்பர் 22 அன்று நேரடி நேர்காணலை நடத்துகிறது. CCNA சான்றிதழ், ரூட்டிங், ஸ்விட்சிங் போன்ற நெட்வொர்க்கிங் திறன் உள்ள பட்டதாரிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

PREV
13
TCS தரும் அட்டகாசமான வாய்ப்பு

முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான TCS தனது சென்னை மற்றும் பெங்களூர் அலுவலகங்களில் காலியாக உள்ள நெட்வொர்க் தொடர்பான பணியிடங்களை நிரப்ப நவம்பர் 22-ஆம் தேதி நேரடி இண்டர்வியூ நடத்த இருக்கிறது. அனுபவம் மற்றும் தகுதி உடைய வேட்பாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். தற்போது Data Network Admin பதவிக்கான தேர்வு நடைபெறுகிறது. இந்தப் பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும் என்பதே அடிப்படை தகுதி. இதனுடன் நெட்வொர்க் துறையைச் சார்ந்த சில முக்கிய திறன்களும் அவசியம்.

23
டெக்னிக்கல் நாலேஜ் இருக்கா.! அப்ப நீங்க கலக்கலாம்

Routing, Switching (Cisco), Wireless போன்ற பிரிவுகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் நெட்வொர்க் ஆபரேஷன்ஸ் பிரச்சனைகளில் troubleshooting திறன் உடையவராக இருக்க வேண்டும். TCP/IP, UDP, OSI Model, Layer 2 concepts (VLANs, STP, VTP) போன்ற அடிப்படை நெட்வொர்க் கூறுகள் பற்றிய தெளிவான அறிவு வேண்டும். அத்துடன் RIP, EIGRP, OSPF போன்ற routing protocols களில் கைபழக்கம் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும். ITIL process, incident handling, change மற்றும் problem management சார்ந்த அறிவும் தேவைப்படுகிறது.

33
தேதிய மறக்க வேண்டாம்

Network DR activities குறித்த புரிதலும் இந்தப் பணிக்கு தேவையாகும். இதற்கான தகுதி வரம்பில் குறைந்தது 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 12 ஆண்டுகள் வரை தொழில் அனுபவம் இருக்க வேண்டும். CCNA சான்றிதழ் கட்டாயம். firewall அடிப்படை அறிவு இருந்தாலும் போதும். சம்பள விவரம் தற்போது அறிவிக்கப்படவில்லை. இறுதி தேர்வின் போது திறமை மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும்.

இந்தப் பணிக்கான இண்டர்வியூ நவம்பர் 22, சனிக்கிழமை அன்று சென்னை மற்றும் பெங்களூரில் ஒரே நாளில் நடைபெறும். அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக விண்ணப்பித்தவர்களுக்கு நேரம், இடம் போன்ற விவரங்கள் தனியாக தெரிவிக்கப்படும். தேர்வாகும் நபர்கள் சென்னை மற்றும் பெங்களூர் கிளைகளில் பணியில் அமர்த்தப்படுவார்கள். நெட்வொர்க் துறையில் வல்லுநராக திகழும் வேட்பாளர்களுக்கு இது அருமையான வேலை வாய்ப்பாகும்.

Read more Photos on
click me!

Recommended Stories