
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனம், மத்திய அரசுக்குச் சொந்தமான ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். தற்போது, இந்நிறுவனத்தில் 372க்கும் மேற்பட்ட ஆபீசர் மற்றும் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் ஆபீசர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது மத்திய அரசு வேலை என்பதால், நாடு முழுவதிலுமிருந்து தகுதியான பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் ஜூன் 1, 2025 அன்று தொடங்கி, ஜூன் 30, 2025 அன்று முடிவடைகின்றன.
HPCL அறிவித்துள்ள பல்வேறு பதவிகளுக்கான கல்வித் தகுதிகள், காலியிடங்கள் மற்றும் சம்பள விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (மெக்கானிக்கல் / சிவில் / குவாலிட்டி கண்ட்ரோல்): இந்த பிரிவுகளில் தலா 10, 50, 19, 15 காலியிடங்கள் உள்ளன. மாதம் ரூ. 30,000 முதல் ரூ. 1,20,000/- வரை சம்பளம் வழங்கப்படும். 3 வருட முழுநேர டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 25-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பொறியாளர் (மெக்கானிக்கல் / எலக்ட்ரிக்கல் / சிவில் / கெமிக்கல்): இந்த பிரிவுகளில் 98, 35, 16, 26 காலியிடங்கள் உள்ளன. மாதம் ரூ. 50,000 முதல் ரூ. 1,60,000/- வரை சம்பளம். தொடர்புடைய துறையில் 4 வருட முழுநேர பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 25-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பட்டயக் கணக்காளர்கள் (CA): 24 காலியிடங்கள். மாதம் ரூ. 50,000 முதல் ரூ. 1,60,000/- வரை சம்பளம். ICAI-ல் தகுதி பெற்ற CA மற்றும் 3 வருட பட்டப்படிப்புடன். வயது வரம்பு 27-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
அதிகாரி - மனித வளம் (HR), தொழில்சார் பொறியியல் (Industrial Engineering), அதிகாரப்பூர்வ மொழி அமலாக்கம் (Official Language Implementation), சட்ட அதிகாரி (Law Officer): இந்த பிரிவுகளில் 6, 1, 2, 3 காலியிடங்கள். மாதம் ரூ. 50,000 முதல் ரூ. 1,60,000/- வரை சம்பளம். தொடர்புடைய முதுகலை பட்டம் அல்லது சட்டப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 27 முதல் 33 வரை.
பாதுகாப்பு அதிகாரி (உத்தர பிரதேசம் / தமிழ்நாடு): தலா 4, 6 காலியிடங்கள். மாதம் ரூ. 50,000 முதல் ரூ. 1,60,000/- வரை சம்பளம். பொறியியல் பட்டம் மற்றும் தொழில்துறை பாதுகாப்பு டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 27-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மூத்த அதிகாரி (City Gas Distribution / Sales / Non-Fuel Business): பல்வேறு பிரிவுகளில் 25, 6, 25, 6 காலியிடங்கள். மாதம் ரூ. 60,000 முதல் ரூ. 1,80,000/- வரை சம்பளம். பொறியியல் பட்டம் / MBA / PGDM பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 28 முதல் 32 வரை.
மேலாளர் / துணை பொது மேலாளர் (Non-Fuel Business / Technical / Sales / Catalyst Business Development / Technical Service / Polymer Expert / Business Development): இந்த மூத்த பதவிகளுக்கு 1 முதல் 3 காலியிடங்கள் வரை உள்ளன. மாதம் ரூ. 80,000 முதல் ரூ. 2,60,000/- வரை சம்பளம். பொறியியல் பட்டம் / MBA / PGDM போன்ற உயர் தகுதிகள் தேவை. வயது வரம்பு 34 முதல் 48 வரை.
IS அதிகாரி / IS பாதுகாப்பு அதிகாரி (சைபர் செக்யூரிட்டி ஸ்பெஷலிஸ்ட்): இந்த பிரிவுகளில் 10, 1 காலியிடங்கள். ஆண்டுக்கு ரூ. 15 லட்சம் முதல் ரூ. 36 லட்சம் வரை சம்பளம். கணினி அறிவியல் / தகவல் தொழில்நுட்பம் / எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் இன்ஜினியரிங் போன்ற துறைகளில் பி.டெக் அல்லது எம்.சி.ஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 29 முதல் 45 வரை.
SC/ ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள், PwBD (Gen/ EWS) பிரிவினருக்கு 10 ஆண்டுகள், PwBD (SC/ ST) பிரிவினருக்கு 15 ஆண்டுகள், PwBD (OBC) பிரிவினருக்கு 13 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
விண்ணப்பக் கட்டணம் ST, SC, PwBD பிரிவினருக்கு இல்லை. மற்றவர்களுக்கு ரூ. 1180/-.
தேர்வு செய்யும் முறை கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு / எழுத்துத் தேர்வு / NET ஸ்கோர் / தட்டச்சுத் தேர்வு, குழுப்பணி / குழு விவாதம், சைக்கோமெட்ரிக் மதிப்பீடு, திறனறி தேர்வு, நேர்காணல், மூட் கோர்ட் (சட்ட அதிகாரிகளுக்கு மட்டும்), உடல் தகுதித் தேர்வு (பொருந்தும் இடங்களில்) போன்ற பல்வேறு படிகளை உள்ளடக்கியது.
விண்ணப்பதாரர்கள் [https://hindustanpetroleum.com/] என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 30, 2025. இந்தப் பொன்னான வாய்ப்பை தவறவிடாமல் உடனே விண்ணப்பித்து பயன்பெறுங்கள்!