Zepto-வில் டெலிவரி பார்ட்னராக சேர்வது எப்படி? எவ்வளவு சம்பாதிக்கலாம்? முழு விவரம்!

Published : Jun 16, 2026, 03:16 PM IST

Zepto-விழ டெலிவரி பார்ட்னராக சேர்வது எப்படி மற்றும் அதன் மூலம் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்பது குறித்த முழுமையான தகவல்களை இங்கே அறிந்துகொள்வோம். தேவைப்படும் ஆவணங்கள், ஆன்லைன் பதிவு, வேலை நேரம் மற்றும் மாத வருவாய் பற்றிய விவரங்களையும் அலசுவோம்.

PREV
13
Zepto-வில் டெலிவரி பார்ட்னராக சேர்வது எப்படி?

Zepto டெலிவரி பார்ட்னராக சேரும் செயல்முறை மிகவும் எளிமையானது. இது பெரும்பாலும் டிஜிட்டல் முறையில் நடைபெறுகிறது.

தேவையான ஆவணங்கள்

ஆதார் அட்டை

ஓட்டுநர் உரிமம்

பைக் அல்லது இரு சக்கர வாகனம்

ஸ்மார்ட்போன்

செயலில் உள்ள வங்கி கணக்கு

பதிவு செய்யும் செயல்முறை

1. Zepto செயலியின் பதிவிறக்கம்: முதலில் Zepto டெலிவரி பார்ட்னர் செயலியை உங்கள் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

2. விவரங்களைச் சமர்ப்பித்தல்: செயலியில் 'Delivery Partner Registration' பகுதியைத் தேர்வு செய்து, உங்கள் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் தேவையான ஆவணங்களை (ID Proof, Address Proof, Bank Details) பதிவேற்ற வேண்டும்.

3. ஆன்லைன் பயிற்சி: பதிவு செய்த பிறகு, ஆன்லைன் பயிற்சியை முடிக்க வேண்டும். இது டெலிவரி செயல்முறை மற்றும் Zepto கொள்கைகள் பற்றிய அறிவை வழங்கும்.

4. கணக்குச் செயல்படுத்தல்: அனைத்து சரிபார்ப்புகளும் முடிந்ததும், உங்கள் டெலிவரி பார்ட்னர் கணக்கு செயல்படுத்தப்படும்.

23
Zepto-வில் எவ்வளவு சம்பாதிக்கலாம்?

Zepto டெலிவரி பார்ட்னர்கள் மாதத்திற்கு ₹20,000 முதல் ₹45,000 வரை சம்பாதிக்க முடியும். இது டெலிவரிகளின் எண்ணிக்கை, வேலை நேரம் மற்றும் பணிபுரியும் நகரத்தைப் பொறுத்து மாறுபடும். பகுதிநேர அல்லது முழுநேர ஷிப்ட்களைத் தேர்வு செய்ய முடியும், இது மாணவர்கள், இல்லத்தரசிகள் மற்றும் கூடுதல் வருமானம் ஈட்ட விரும்புபவர்களுக்கு ஏற்றது.

ஊக்கத்தொகைகள் 

உச்சபட்ச நேர டெலிவரிகள் (peak hours), சிறப்பாக செயல்படும் டெலிவரி பார்ட்னர்களுக்குக்கான ஊக்கத்தொகைகள் (incentives) மற்றும் போனஸ்கள் வழங்கப்படுகின்றன. மேலும், வெற்றிகரமான பரிந்துரைகளுக்கு ₹7,000 வரை பரிந்துரை போனஸ்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. வருவாய்கள் நேரடியாக வங்கிக் கணக்கில் வாராந்திர அடிப்படையில் செலுத்தப்படும்.

33
மருத்துவ காப்பீடு

டெலிவரி பார்ட்னர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது. 

உள்ளூர் வேலை வாய்ப்பு 

உங்கள் ஸ்டோரில் இருந்து 3 கி.மீ. சுற்றளவுக்குள் டெலிவரி செய்யலாம். எந்த நேரத்திலும் ரைடர் ஆதரவு குழுவிடம் இருந்து உதவியும் பெற முடியும்.

Read more Photos on
click me!

Recommended Stories