இந்திய ரயில்வேயில் 6,500-க்கும் அதிகமான டெக்னீஷியன் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கூட இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்ற முழு விவரங்களையும் இங்கே பார்க்கலாம்.
அரசு வேலை என்பது லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவு. பலர் படிப்பு முடிந்ததும் தனியார் வேலைக்குச் செல்லாமல், முழு நேரத்தையும் அரசுத் தேர்வுகளுக்காகச் செலவிடுகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு இந்திய ரயில்வே ஒரு நல்ல வாய்ப்பை வழங்கியுள்ளது. டிகிரி, பி.ஜி. எல்லாம் தேவையில்லை, வெறும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும், ரயில்வேயில் வேலை வாங்கிடலாம்.
ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), 6500-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப (Indian Railways Recruitment 2026) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆரம்பத்திலேயே நல்ல சம்பளமும் கிடைப்பதால், கொஞ்சம் கஷ்டப்பட்டு முயற்சித்தால் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம்.
25
ரயில்வேயில் என்னென்ன பதவிகள் உள்ளன?
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, டெக்னீஷியன் கிரேடு 1 சிக்னல் மற்றும் டெக்னீஷியன் கிரேடு 3 பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தமாக 6,565 காலிப் பணியிடங்கள் உள்ளன. டெக்னீஷியன் கிரேடு 1 சிக்னல் (Technician Grade 1 Signal) பதவிக்கு விண்ணப்பிக்க, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பி.எஸ்சி (B.Sc) அல்லது இன்ஜினியரிங் பட்டம் பெற்றிருக்க வேண்டும். டெக்னீஷியன் கிரேடு 3 (Technician Grade 3) பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், NCVT/SCVT அங்கீகாரம் பெற்ற டிரேடில் ஐடிஐ (ITI) சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
35
ரயில்வே பதவிகளுக்கான தேர்வு செயல்முறை எப்படி இருக்கும்?
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), டெக்னீஷியன் பதவிகளுக்கு கணினி அடிப்படையிலான தேர்வு (Computer Based Test) மூலம் விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்யும். இதைத் தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்பு (Document Verification) மற்றும் மருத்துவப் பரிசோதனை (Medical Test) அடிப்படையில் இறுதித் தேர்வு இருக்கும். விண்ணப்பதாரர்கள் அனைத்து நிலைகளிலும் தகுதி பெற்றால் மட்டுமே வேலை உறுதியாகும்.
டெக்னீஷியன் கிரேடு 1 சிக்னல் பதவிக்குத் தேர்வாகும் நபர்களுக்கு, பே லெவல் 5-ன்படி மாதம் ரூ.29,200 ஆரம்ப சம்பளமாக வழங்கப்படும். டெக்னீஷியன் கிரேடு 3 பதவிக்குத் தேர்வானால், மாதம் ரூ.19,900 ஆரம்ப சம்பளம் கிடைக்கும். வயது வரம்பைப் பொறுத்தவரை, டெக்னீஷியன் கிரேடு 1 சிக்னல் பதவிக்கு 18 முதல் 36 வயது வரையும், டெக்னீஷியன் கிரேடு 3 பதவிக்கு 18 முதல் 30 வயது வரையும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
55
ரயில்வே வேலைக்கு விண்ணப்பிக்கும் முறை
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம். ஜூன் 30-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 29. கடைசித் தேதி வரை காத்திருக்காமல் முன்கூட்டியே விண்ணப்பிப்பது நல்லது. முதலில், ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்க வேண்டும். முதன்மை இணையதளம்: https://www.rrbcdg.gov.in (மத்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம்). இந்த இணையதளங்களில் உள்ள ஆட்சேர்ப்பு அறிவிப்பைக் கிளிக் செய்ய வேண்டும். உங்கள் தனிப்பட்ட விவரங்களுடன் விண்ணப்பப் படிவத்தை கவனமாக நிரப்ப வேண்டும். தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும். இறுதியாக, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.