தமிழ்நாடு அரசு 2025-26 ஆண்டிற்காக வெளியிட்டுள்ள முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் திட்டம், கிராமப்புற இளைஞர்களுக்கு பெரிய வாய்ப்பாக மாறியுள்ளது. கரூர் மாவட்டம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம் மூலம் வேளாண் மற்றும் தோட்டக்கலை துறையில் படித்த இளைஞர்கள் தங்களுக்கான தனிநபர் தொழிலை எளிதாக தொடங்க முடியும்.
இம்மையங்கள் மூலம் உழவர்களுக்கு விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் உள்ளிட்ட தேவையான பொருட்கள் வழங்கப்படுவதோடு, பயிர்களில் ஏற்படும் பூச்சி தாக்கம், நோய் மேலாண்மை, விளைச்சல் உயர்த்தும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படும். மேலும் வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டும் முறைகள் பற்றிய பயிற்சிகளும் இங்கு கிடைக்கும்.