Job Vacancy: சென்னையில் வேலை தேடும் பெண்களுக்கு அரிய வாய்ப்பு.! கைநிறைய சம்பளம், பாதுகாப்பான பணி.! உடனே அப்ளை பண்ணுங்க.!

Published : Nov 18, 2025, 06:23 AM IST

பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த சேவை மையங்களில் உள்ளூர் பெண்களுக்கு பல்வேறு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சமூகப் பணி, ஆலோசனை, பாதுகாப்பு போன்ற துறைகளில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

PREV
14
சென்னையில் வேலை.!

பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையங்களில் (OSC) பல்வேறு பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் அவசர சூழ்நிலைகளில் உடனடி உதவி வழங்கும் நோக்கத்துடன் செயல்படும் இந்த மையங்களில், மருத்துவம், ஆலோசனை, பாதுகாப்பு, தரவு மேலாண்மை போன்ற பல துறைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படும் இந்த பணியிடங்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் ரூ.10,000 முதல் ரூ.35,000 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

24
பட்டத்துடன் "பைக்" வேண்டும்

மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர், தகவல் தொழில்நுட்ப பணியாளர், வழக்கு பணியாளர்கள், பாதுகாப்பாளர், பன்முக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் தற்போது நிரப்பப்படுகின்றன. சமூகப் பணியில் முதுகலை/இளங்கலை தகுதி கொண்டவர்களுக்கு மேலான வாய்ப்புகள் உள்ளன. இதற்குடன், உளவியல் ஆலோசனை, தரவு மேலாண்மை, அலுவலகப் பணித் திறன் போன்ற துறைகளில் அனுபவம் இருந்தால் கூடுதல் முன்னுரிமை வழங்கப்படும். சில பதவிகளுக்கு வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

34
உள்ளூர் பெண்களுக்கு ஜாக்பாட்.!

இந்த வேலைவாய்ப்பில் முக்கிய அம்சமாக, அனைத்து பதவிகளுக்கும் உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேர சுழற்சி பணிமுறை உள்ளதால், பொறுப்பு உணர்வு மற்றும் நேர்த்தியான பணிச்செயல் அவசியம். நொச்சிக்குப்பம், எழில் நகர், சோழிங்கநல்லூர், கண்ணகி நகர், செம்மஞ்சேரி ஆகிய ஐந்து பகுதிகளில் பணியிடங்கள் உள்ளன.

44
விண்ணப்பம் செய்வது இப்படிதாான்.!

விருப்பமுள்ளவர்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இணையதளம் chennai.nic.in மூலம் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். தேவையான சான்றிதழ்களுடன் விண்ணப்பத்தை 21.11.2025 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் நேரடியாக மாவட்ட சமூகநல அலுவலகத்திற்கோ அல்லது oscchennaib@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பலாம். பெண்களுக்கு சேவை செய்யும் அருமையான வாய்ப்பாக இந்த வேலைவாய்ப்பு அமைந்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories