Budget 2026 மத்திய பட்ஜெட் 2026-ல் திறன் மேம்பாட்டுத் துறைக்கு ரூ.9,885 கோடி நிதி. பிஎம் சேது திட்டம் மூலம் ஐடிஐ-கள் நவீனப்படுத்தப்படும். முக்கிய அறிவிப்புகள் இதோ.
026-27 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்திற்கு (Skill Ministry) ஒதுக்கப்பட்ட நிதி நான்கு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு திருத்தப்பட்ட மதிப்பீட்டில் ரூ.2,703 கோடியாக இருந்த நிதி, இம்முறை ரூ.9,885.80 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யவும், தொழில்துறைக்கு ஏற்ற திறன்களை வளர்க்கவும் இந்த மெகா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
25
பிஎம் சேது திட்டம்: ஐடிஐ-களின் தரம் உயரும்
இந்த பட்ஜெட்டின் முக்கிய சிறப்பம்சமே 'பிஎம் சேது' (PM SETU - Pradhan Mantri Skilling and Employability Transformation through Upgraded ITIs) திட்டம்தான். திறன் மேம்பாட்டு அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் 60 சதவீதத்திற்கும் மேல், அதாவது ரூ.6,140.50 கோடி இந்தத் திட்டத்திற்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்கள் (ITIs) நவீனப்படுத்தப்படும்.
35
தொழிற்பயிற்சி நிலையங்களில் என்ன மாற்றம்?
பழமையான பாடத்திட்டங்களுக்குப் பதிலாக, இன்றைய நவீன தொழில்துறைக்குத் தேவையான பயிற்சிகள் ஐடிஐ-களில் அறிமுகப்படுத்தப்படும். உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவதோடு, படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பைப் பெறும் வகையில் பயிற்சிகள் மாற்றி அமைக்கப்படும். குறிப்பாக டையர்-2 மற்றும் டையர்-3 நகரங்களில் உள்ள இளைஞர்களுக்கு இது பெரும் பயனளிக்கும்.
சுகாதாரம், ஜவுளித்துறை, சுற்றுலா, லாஜிஸ்டிக்ஸ் மற்றும் அனிமேஷன் (AVGC) போன்ற துறைகளில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். குறுகிய கால பயிற்சிகளுக்குப் பதிலாக, நீண்ட கால வேலைவாய்ப்பை உறுதி செய்யும் துறை சார்ந்த பயிற்சிகளாக இவை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
55
அமைச்சர் மகிழ்ச்சி
இந்த நிதி ஒதுக்கீடு குறித்து கருத்து தெரிவித்த திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி, "இது இளைஞர் சக்தியை மையமாகக் கொண்ட பட்ஜெட். விக்சித் பாரத் 2047 கனவை நனவாக்க, திறன் மேம்பாட்டுக்கு 62% கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது," என்று தெரிவித்துள்ளார்.