DA Hike: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயருமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் தீபாவளி பரிசு.!

Published : Sep 10, 2026, 09:55 AM IST

நவராத்திரி அல்லது தசரா பண்டிகையை ஒட்டி மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கியமான ஜாக்பாட் அறிவிப்பு வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அந்த நல்ல விஷயத்தை நோக்கி அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர்.

PREV
15
நவராத்திரி அல்லது தசரா பண்டிகையை ஒட்டி அறிவிப்பு வெளியாகலாம்
மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக அகவிலைப்படி (DA) உயர்வுக்காகக் காத்திருக்கின்றனர். வழக்கமாக செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் மத்திய அரசு DA உயர்வை அறிவிக்கும். இந்த முறையும் அக்டோபரில், குறிப்பாக நவராத்திரி அல்லது தசரா பண்டிகையை ஒட்டி அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
25
மூன்று ரயில்வே மல்டி-டிராக்கிங் திட்டங்களுக்கு ஒப்புதல்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், ₹10,783 கோடி மதிப்பிலான மூன்று ரயில்வே மல்டி-டிராக்கிங் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்தத் திட்டங்கள் மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ள 14 மாவட்டங்கள் வழியாக சுமார் 656 கி.மீ. நீளத்திற்கு செயல்படுத்தப்படும்.
35
4,790 கிராமங்களின் ரயில் இணைப்பு மேம்படும்
இந்த ரயில்வே திட்டங்கள் மூலம் சுமார் 4,790 கிராமங்களின் ரயில் இணைப்பு மேம்படும். இதன் மூலம் சுமார் 56 லட்சம் மக்கள் பயனடைவார்கள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆண்டுக்கு சுமார் 2.7 கோடி டன் கூடுதல் சரக்குகளைக் கையாளும் திறன் உருவாகும்.
45
தற்போது 60% ஆக உள்ள DA, 63% ஆக உயரும்
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) உயர்வு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த விஷயம் கூட்டத்தில் விவாதிக்கப்படவே இல்லை என்றும் கூறப்படுகிறது. ஊடக அறிக்கைகளின்படி, இம்முறை DA 3% வரை உயர வாய்ப்புள்ளது. அது உண்மையானால், தற்போது 60% ஆக உள்ள DA, 63% ஆக உயரும். இருப்பினும், இது இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்ல.
55
DA குறித்த முடிவிற்காக இன்னும் காத்திருக்க வேண்டும்
முன்னதாக, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், மத்திய அரசு ஜனவரி 1, 2026 முதல் அகவிலைப்படியை 2% உயர்த்தி 60% ஆக நிர்ணயித்தது. அதே விகிதத்தில், மத்திய ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணமும் (DR) 60% ஆக உயர்த்தப்பட்டது. ஊழியர்கள் DA குறித்த முடிவிற்காக இன்னும் காத்திருக்க வேண்டும். அக்டோபர் மாதம் நடைபெறும் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read more Photos on
click me!

Recommended Stories