மாணவர்களுக்கு ஜாக்பாட்! இனி 'ரீ-வேல்வேஷன்' தேவையே இருக்காது.. சிபிஎஸ்இ கொண்டு வந்த அந்த மெகா திட்டம்!

Published : Feb 14, 2026, 06:00 AM IST

CBSE சிபிஎஸ்இ 2026 பொதுத்தேர்வில் 12ம் வகுப்பு விடைத்தாள்கள் இனி ஆன்லைனில் திருத்தப்படும். 'ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்' முறையின் நன்மைகள் மற்றும் விவரங்கள் இதோ.

PREV
15
CBSE

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), 2026-ம் ஆண்டுக்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இனி விடைத்தாள்களை ஆசிரியர்கள் பேனாவால் திருத்தும் முறைக்கு விடை கொடுக்கப்படுகிறது. அதற்குப் பதிலாக, 'ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்' (On-Screen Marking - OSM) என்ற முழுமையான டிஜிட்டல் மதிப்பீட்டு முறையைச் சிபிஎஸ்இ அறிமுகப்படுத்தியுள்ளது. சுமார் 10.4 கோடி விடைத்தாள்களைக் கையாள்வதற்கும், முடிவுகளை விரைவாக வெளியிடுவதற்கும் இந்த முறை உதவும் என்று சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

25
எப்படிச் செயல்படும் இந்த புதிய முறை?

இந்த புதிய முறையின்படி, மாணவர்கள் எழுதிய விடைத்தாள்கள் அனைத்தும் பிரத்யேக மையங்களில் ஸ்கேன் செய்யப்பட்டு (Scanned), டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றப்படும். பின்னர் அவை பாதுகாப்பான சர்வரில் பதிவேற்றப்படும். ஆசிரியர்கள் விடைத்தாள்களைத் திருத்துவதற்குத் தனியாக விடைத்தாள் கட்டுகளைச் சுமந்து செல்ல வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக, cbse.onmark.co.in என்ற இணையதளத்தில் லாகின் செய்து, கம்ப்யூட்டர் திரையிலேயே விடைத்தாள்களைத் திருத்தலாம்.

35
பிழைகளுக்கு இடமில்லை (Zero Error Policy)

முந்தைய முறைகளில் மதிப்பெண்களைக் கூட்டும்போதோ அல்லது விடைத்தாளிலிருந்து முகப்புப் பக்கத்திற்கு மாற்றும்போதோ மனிதத் தவறுகள் (Human Errors) நடக்க வாய்ப்பிருந்தது. ஆனால், இந்த டிஜிட்டல் முறையில் ஒவ்வொரு கேள்விக்கும் மதிப்பெண் வழங்கியவுடன், சிஸ்டமே தானாகவே மொத்த மதிப்பெண்களைக் கணக்கிட்டுவிடும். ஏதேனும் ஒரு கேள்விக்கு மதிப்பெண் வழங்காமல் விட்டால், விடைத்தாளைச் சமர்ப்பிக்க (Submit) முடியாது. இதனால் கூட்டல் பிழைகள் மற்றும் விடுபட்ட மதிப்பீடுகள் முற்றிலுமாகத் தவிர்க்கப்படும்.

45
மாணவர்களுக்கு என்ன பயன்?

இந்த மாற்றத்தால் மாணவர்கள் தேர்வு எழுதும் முறையில் எந்த மாற்றமும் இல்லை. அவர்கள் வழக்கம் போல் பேப்பர் மற்றும் பேனாவைப் பயன்படுத்தியே தேர்வு எழுதுவார்கள். ஆனால், மதிப்பீடு டிஜிட்டல் முறையில் நடப்பதால், தேர்வு முடிவுகள் மிக விரைவாக வெளியாகும். மேலும், மதிப்பெண் கூட்டல் பிழைகள் இருக்காது என்பதால், மறுமதிப்பீடு (Revaluation) கோரும் அவசியமும் குறையும். இது மாணவர்களுக்குத் தேவையற்ற மன உளைச்சலைக் குறைக்கும்.

55
ஆசிரியர்களுக்குக் கட்டுப்பாடுகள்

இந்த முறையில் ஆசிரியர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் விடைத்தாள்களைத் திருத்த முடியாது. பள்ளிகளில் உள்ள குறிப்பிட்ட ஐபி முகவரியிலிருந்து (IP Address) மட்டுமே லாகின் செய்ய முடியும். ஒரு விடைத்தாளைத் திருத்த எவ்வளவு நேரம் ஆகிறது, எத்தனை விடைத்தாள்கள் திருத்தப்பட்டுள்ளன என்பதை சிபிஎஸ்இ தலைமையகம் நேரடியாகக் கண்காணிக்கும். இது மதிப்பீட்டுப் பணியில் வெளிப்படைத்தன்மையையும், நம்பகத்தன்மையையும் அதிகரிக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories