ஐஐடி-யில் சேரும் மாணவிகள்.. 7 வருஷத்துல இப்படி ஒரு மாற்றமா? ஆனா இதுல ஒரு பெரிய 'ட்விஸ்ட்' இருக்கு!

Published : Feb 14, 2026, 05:32 AM IST

IIT கடந்த 7 ஆண்டுகளில் ஐஐடி-களில் சேரும் பெண்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது. இருப்பினும் ஆண்-பெண் இடைவெளி அதிகரித்துள்ளது. முழு விவரம் இங்கே.

PREV
14
IIT

இந்தியாவின் மிக உயரிய கல்வி நிறுவனங்களான ஐஐடி-களில் (IITs) சேரும் மாணவிகளின் எண்ணிக்கை கடந்த 7 ஆண்டுகளில் இருமடங்காக அதிகரித்துள்ளது. 2018-ம் ஆண்டில் 5 முக்கிய ஐஐடி-களில் (மும்பை, டெல்லி, கான்பூர், கரக்பூர், மெட்ராஸ்) வெறும் 1,621 மாணவிகள் மட்டுமே சேர்ந்திருந்த நிலையில், 2025-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 3,247-ஆக உயர்ந்துள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் (STEM) பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது. பிப்ரவரி 11-ம் தேதி யுனெஸ்கோ (UNESCO) கொண்டாடிய 'அறிவியலில் பெண்கள் மற்றும் சிறுமிகள்' தினத்திற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

24
அதிகரிக்கும் பாலின இடைவெளி - ஏன்?

என்னதான் மாணவிகளின் எண்ணிக்கை உயர்ந்தாலும், மறுபுறம் ஆண்களுக்கும் பெண்களுக்குமான இடைவெளி (Gender Gap) அதிகரித்துக்கொண்டே செல்கிறது. காரணம், மாணவிகளின் எண்ணிக்கை உயர்வதை விட, ஐஐடி-களில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு வேகமாக அதிகரித்து வருகிறது. 2018-ல் 7,007-ஆக இருந்த இந்த இடைவெளி, 2025-ல் 9,153-ஆக உயர்ந்துள்ளது. அதாவது, ஐஐடி வகுப்பறைகளில் பெண்களை விட ஆண்களின் ஆதிக்கம் இன்னும் அதிகமாகவே உள்ளது. மொத்த சேர்க்கையில் பெண்கள் இன்னும் ஐந்தில் ஒரு பங்கு என்ற நிலையிலேயே உள்ளனர்.

34
ஐஐடி மெட்ராஸ் முதலிடம்

ஐஐடி வாரியாகப் பார்க்கும்போது, சென்னை ஐஐடி (IIT Madras) பெண்களைச் சேர்ப்பதில் முன்னணியில் உள்ளது. 2018-ல் 519 மாணவிகள் சேர்ந்த நிலையில், 2025-ல் அது 1,173-ஆக உயர்ந்துள்ளது. ஐஐடி மும்பை மற்றும் ஐஐடி டெல்லியும் கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. இருப்பினும் கான்பூர் மற்றும் கரக்பூர் ஐஐடி-களில் மாணவிகளின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது. ஜேஇஇ மெயின் (JEE Main) மற்றும் அட்வான்ஸ்டு (Advanced) தேர்வுகள் மூலமாகவே இந்த சேர்க்கை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

44
யுனெஸ்கோ சொல்லும் பாடம்

இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகளாவிய பிரச்சினையாகவும் உள்ளது என்று யுனெஸ்கோ கூறுகிறது. உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் கூட பெண்கள் இல்லை. உயர்கல்வியில் பெண்கள் அதிகம் சேர்ந்தாலும், அறிவியல் பட்டதாரிகளாக (Science Graduates) மாறுவதில் பின்தங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாகத் தனியார் துறை ஆராய்ச்சிகளில் ஆண்களே அதிகம் ஆதிக்கம் செலுத்துகின்றனர். குவாண்டம் அறிவியல் மற்றும் நீர் மேலாண்மை போன்ற வளர்ந்து வரும் துறைகளில் பெண்களின் பங்களிப்பு இன்னும் அதிகரிக்க வேண்டும் என யுனெஸ்கோ வலியுறுத்துகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories