இந்த அப்ரண்டிஸ் பணிகளுக்கு எந்த எழுத்துத் தேர்வும் கிடையாது. விண்ணப்பதாரர்களின் பட்டப் படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் Short Listing செய்யப்படும். அதன்பிறகு, சான்றிதழ் சரிபார்ப்பு (Document Verification) நடைபெறும்.
விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், கனரா வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://canarabank.bank.in/ மூலம் அக்டோபர் 12, 2025-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் பதிவு செப்டம்பர் 23, 2025 முதல் தொடங்குகிறது. இந்த அருமையான வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பியுங்கள்.