BHEL job Vacancy: பெல் நிறுவனத்தில் சூப்பர் வேலை வாய்ப்பு! 695 காலி பணியிடங்கள்! சம்பளம் எவ்வளவு தெரியுமா?

First Published | Oct 20, 2024, 3:33 PM IST

BHEL Recruitment 2024: பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பட்டதாரி, டிப்ளமோ மற்றும் ஐடிஐ முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் https://trichy.bhel.com/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

மத்திய பாதுகாப்புத்துறையின் கட்டுப்பாட்டில் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL or Bharat Electronics Limited) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு போபால், அரித்வார், ஐதராபாத், சான்சி, திருச்சி, இராணிப்பேட்டை  ஆகிய ஊர்கள் உள்பட 15க்கும் மேற்பட்ட இடங்களில் இந்நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவுகள் உள்ளன. இந்தியாவின் பல்வேறு துறைகளுக்கு தேவையான எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை இந்த நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.

மத்திய பாதுகாப்புத்துறையின் கட்டுப்பாட்டில் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL or Bharat Electronics Limited) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு போபால், அரித்வார், ஐதராபாத், சான்சி, திருச்சி, இராணிப்பேட்டை  ஆகிய ஊர்கள் உள்பட 15க்கும் மேற்பட்ட இடங்களில் இந்நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவுகள் உள்ளன. இந்தியாவின் பல்வேறு துறைகளுக்கு தேவையான எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை இந்த நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.

Tap to resize

பணியின் விவரங்கள் :

பட்டதாரி பணியிடங்கள்

சிவில் இன்ஜினியரிங்- 20, கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்- 10, எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்- 5, எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் - 5 , 
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்- 95, 

டிப்ளமோ பணியிடங்கள்:

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் - 70, கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்- 10, சிவில் இன்ஜினியரிங் - 10, எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் - 10.
எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் - 10

ஐடிஐ தொழிற்பயிற்சி (ITI):

ஏசி மெக்கானிக் - 7, எலக்ட்ரீசியன் - 40, பிட்டர் - 180, இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக் - 10, மோட்டார் மெக்கானிக்- 10, டர்னர்- 20, வெல்டர்- 120, மெஷினிஸ்ட் - 30, COPA - 13

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும். டிப்ளமோ பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். தொழிற்பயிற்சி பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட துறையில் ஐ.டி.ஐ. முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தது 18 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்வது எப்படி?

விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு திறனாய்வு தேர்விற்கு அழைக்கப்படுவர். திறனாய்வு தேர்வு மற்றும் கல்வித்தகுதியின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

சம்பளம் விவரம்:

டிகிரி முடித்தவர்களுக்கு மாதம் ரூ.9,000, டெக்னீஷியன் தொழிற்பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.8,000, ஐடிஐ பிரிவில் தொழிற்பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.8,050, வெல்டர் மற்றும் COPA பதவிகளுக்கு ரூ.7,700 உதவித்தொகையாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனங்களில் உள்ள தொழிற்பயிற்சி இடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் http://www.mhrdnats.gov.in/ என்ற இணையதளத்தில் முதலில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் https://trichy.bhel.com/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

Latest Videos

click me!