மாவட்ட சுகாதார சங்கத்தில் டிரைவர், செவிலியர், மருத்துவ அலுவலர் உள்ளிட்ட 27 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். வேலை தேடுபவர்களுக்கு பொன்னான நேரம் இதுவாகும்.
மாவட்ட சுகாதார சங்கத்தில் (நாமக்கல் DHS) அற்புதமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. வேலை தேடுபவர்கள் மற்றும் அரசு வேளையில் சேர வேண்டும் என்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
25
District Health Society Jobs
நாமக்கல்லில் டிஇஓ, டிரைவர், செவிலியர், மருத்துவ அலுவலர் உள்ளிட்ட 27 பணியிடங்களுக்கான காலியிடங்கள் அறிவிப்பட்டுள்ளது. ஆஃப்லைன் விண்ணப்ப செயல்முறை 12-10-2024 அன்று தொடங்கி 28-10-2024 வரை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
35
Tamilnadu Govt Jobs 2024
காலியிடங்கள் மற்றும் விண்ணப்ப நடைமுறைகள் பற்றிய விரிவான தகவலுக்கு, https://namakkal.nic.in/ என்ற எங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட சுகாதார சங்கம் ஆனது நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு நடத்துகின்றனர்.
விண்ணப்பதாரர்கள் வேலை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி வரம்புகள், வயது வரம்புகள், தேர்வு நடைமுறைகள் மற்றும் சம்பள தொகுப்புகளை மதிப்பாய்வு செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள். இந்த காலியிடங்கள் ஆனது எம்பிபிஎஸ் முதல் 8வது படித்தவர்கள் வரை பல பணியிடங்களை நிரப்ப உள்ளது.
55
TN Govt Jobs 2024
விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 40 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் இந்த வேலைக்கு ஆஃப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் மற்றும் கட்டணம் எதுவும் விண்ணப்பக் கட்டணம் வசூலிக்கப்படாது. இதுகுறித்து மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.