பரோடா வங்கியில் வேலை ரூ.37,000 சம்பளம், 10ம் வகுப்பு போதும்!

Published : May 22, 2025, 02:10 PM ISTUpdated : May 22, 2025, 06:53 PM IST

பேங்க் ஆஃப் பாங்க் ஆஃப் பரோடா 500 அலுவலக உதவியாளர்களை நியமிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

PREV
14
Bank of Baroda Jobs: Office Assistant - 500 Posts!

இந்தியாவில் அரசு வேலைக்கு எப்படியாவது சென்று விட வேண்டும் என்ற கனவுடன் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். தமிழ்நாட்டிலும் ஏராளமானோர் தனியார் வேலையையே துறந்து விட்டு போட்டித் தேர்வுகளுக்கு படித்து வருகின்றனர். 

தமிழ்நாட்டில் மாநில அரசு நடத்தும் டிஎன்பிஎஸ்சி தேர்விலும், மத்திய அரசு நடத்தும் தேர்வுகளிலும் பங்கேற்க இளைஞர்கள், இளம்பெண்கள் பங்கேற்று வருகின்றனர்.

24
பேங்க் ஆஃப் பரோடா வங்கி பணியிடங்கள்

இந்நிலையில், பொதுத்துறை வங்கியான பரோடா 500 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. அதாவது பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) வங்கி 500 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 24 பணியிடங்கள் உள்ளன. 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அலுவல் மொழியை பேசவும் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

34
பரோடா வங்கி தேர்வு எப்படி இருக்கும்?

1.5.2025 அன்று நிலவரப்படி 18 வயது முதல் 26 வயது வரை உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. 

தகுதியானவர்களுக்கு கணினி வழித் தேர்வு மற்றும் வட்டார மொழித் தேர்வு நடத்தப்படும். இதில் வெற்றி பெறுபவர்கள் மார்க் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

44
விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பிக்க கடைசி தேதி 23.5.2025 (அதாவது நாளை) ஆகும். ஆகவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இன்றே விண்ணப்பித்துக் கொள்வது சிற்ந்தது. பேங்க் ஆஃப் பரோடா அலுவலக உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.19,500 முதல் ரூ.37,815 வரை சம்பளம் கிடைக்கும். 

தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் https://www.bankofbaroda.in/career/current-opportunities/recruitment-of-office-assistant-in-sub-staff-cadre-on-regular-basis என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக‌ பொதுப் பிரிவினருக்கு 600 ரூபாயும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 100 ரூபாயும் செலுத்த வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories