அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டம் (Degree) பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழி தெரிந்திருப்பது அவசியம்.
வயது வரம்பு
குறைந்தபட்சம்: 20 வயது
அதிகபட்சம்: 28 வயது (01.11.2025 தேதியின்படி) அரசு விதிகளின்படி வயது தளர்வு அளிக்கப்படும்:
SC/ST – 5 ஆண்டுகள்
OBC – 3 ஆண்டுகள்
மாற்றுத்திறனாளிகள் – 10 ஆண்டுகள்
ஊதியம்
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ₹15,000/- வரை பயிற்சி ஊக்கத்தொகை (Stipend) வழங்கப்படும். இது ஒப்பந்த அடிப்படையிலான பயிற்சி வேலை ஆகும்.
தேர்வு முறை
விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்:
- ஆன்லைன் எழுத்துத் தேர்வு
- சான்றிதழ் சரிபார்ப்பு
- உள்ளூர் மொழி தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பம் முழுவதும் ஆன்லைன் மூலம் மட்டுமே செய்ய வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
பொதுப்பிரிவு / OBC / EWS – ₹800
SC / ST / மாற்றுத்திறனாளிகள் – விலக்கு (No Fee)
விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 1 பிப்ரவரி 2025
முக்கிய இணைப்பு:
அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படிக்கவும் மற்றும் விண்ணப்பிக்கவும்: Bank of Baroda – Official Careers Page
சிறப்பு அம்சங்கள்:
- பட்டதாரிகளுக்கு வங்கி துறையில் அனுபவம் பெறும் சிறந்த வாய்ப்பு.
- தமிழ்நாடு, தென்னிந்திய மாநிலங்களில் அதிக காலியிடங்கள்.
- சாதாரண பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
- வேலை அனுபவத்துடன் வங்கி துறையில் நிலையான தொழில் வாய்ப்பு உருவாக்கும் வாய்ப்பு.
வங்கி துறையில் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு இது ஒரு சூப்பர் சான்ஸ்! தகுதியுள்ளவர்கள் தாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கடைசி நாள்: 1 பிப்ரவரி 2025
விண்ணப்பம்: Bank of Baroda அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாக மட்டுமே