ரயில்வேயில் 25,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? விளையாட்டு வீரர்களுக்கான அரிய வாயப்பு

Published : Aug 21, 2024, 09:43 PM IST

தென்கிழக்கு ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியான விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
16
ரயில்வேயில் 25,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? விளையாட்டு வீரர்களுக்கான அரிய வாயப்பு
Railway Job

12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஏதேனும் ஒரு பிரிவில் ஐடிஐ முடித்துள்ள தகுதியான நபர்களுக்கு மாத சம்பளமாக 5,200 முதல் 20,200 வழங்கப்படும் என்று அறிக்கப்பட்டள்ளது.

26
Railway Job

அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்கள் விளையாட்டு பிரிவில் தேசிய, மாநில மற்றும் பல்கலைக்கழக அளவிலான விளையாட்டு போட்டிகளில் விளையாடி முதல் 3 இடங்களில் ஏதேனும் ஒரு இடத்தை பெற்று வென்றிருக்க வேண்டும்.

36
Railway Job

தேசிய அளவில் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டிகளில் பங்கேற்று முதல் 3 இடங்களில் ஏதேனும் ஒன்றில் வெற்றி பெற்றவர்கள், சம்பந்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் 25.06.2020க்கு பின்னர் விண்ணப்பதாரர் பெற்ற விளையாட்டு சாதனைகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

46
தேர்வு முறை

வி்ண்ணப்பதாரரின் விளையாட்டு தகுதி மற்றும் விளையாட்டு போட்டிகளில் பெற்ற சாதனைகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

56
விண்ணப்ப கட்டணம்

தேர்வர்கள் ரூ.500 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் எஸ்சி, எஸ்டி, பெண்கள், ஓபிசி மற்றும் சிறுபான்மையினர் ரூ.250 செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணத்தை வங்கி வரைவோலையாக செலுத்த வேண்டும். கட்டணத்தை FA & CAO, South Eastern Railway, Garden Reach, Gpo/Kolkata.

66
Railway Job

ஆர்வம் உள்ளவர்கள் www.rrcser.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து The chairman, rrc, garden, kolkata - 700 043 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories