உயர்கல்வி மேற்கொள்ளும் மாணவ மாணவிகளுக்கு ஆதரவு வழங்க பல்வேறு கல்வி உதவித்தொகைகள் உள்ளன. இத்தொகைபில் இந்தியாவின் சிறந்த ஸ்காலர்ஷிப் திட்டங்கள் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.
அரசாங்கத்தால் வழங்கப்படும் பல உதவித்தொகைகளை இந்த இணையதளம் மூலம் பெறலாம். இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் விண்ணப்ப செயல்முறையை இது எளிதாக்குகிறது.
210
மத்திய உதவித்தொகை திட்டம்
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த திறமையான மாணவர்களுக்கான இந்தத் திட்டம், இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான கல்விச் செலவுகளை ஈடுகட்ட உதவுகிறது.
310
சிறுபான்மையினருக்கான போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டம்
இந்த உதவித்தொகை திட்டம் சிறுபான்மையினங்களைச் சேர்ந்த மாணவர்கள் மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்த பிறகு உயர்கல்வியைத் தொடர உதவுகிறது.
410
கிஷோர் வைக்யானிக் ப்ரோட்சகன் யோஜனா
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் நிர்வகிக்கப்படும் அறிவியல் படிப்புகளில் ஆராய்ச்சிப் பணியைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கான மதிப்புமிக்க உதவித்தொகை இது.
510
உயர் கல்விக்கான இன்ஸ்பைர் உதவித்தொகை
12ஆம் வகுப்பில் அறிவியலில் சிறந்து விளங்கும் மாணவர்களை அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட ஊக்குவிக்கும் வகையில் இந்த ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது.
610
நேஷனல் மீன்ஸ்-கம்-மெரிட் ஸ்காலர்ஷிப்
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களை இலக்காகக் கொண்டு, இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. 8ஆம் வகுப்புக்குப் பிறகு கல்வியைத் தொடர உதவுகிறது.
710
ரயில்வே ஊழியர்களுக்கான பிரதமரின் உதவித்தொகை திட்டம்
தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப படிப்புகளை தொடர ரயில்வே பாதுகாப்பு படை பணியாளர்களின் பிள்ளைகளுக்கு இந்த நிதி உதவி வழங்கப்படுகிறது.
810
பெண்களுக்கான AICTE பிரகதி உதவித்தொகை
இந்த உதவித்தொகை பெண்கள் தொழில்நுட்பக் கல்வி பயில்வதற்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தொழில்களைத் தொடர அவர்களை ஊக்குவிக்கிறது.
910
சிறுபான்மை மாணவர்களுக்கான MOMA உதவித்தொகை
சிறுபான்மை விவகார அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் இந்த உதவித்தொகை சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் கல்விக்கு நிதி உதவி வழங்குகிறது.
1010
எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுககான ONGC உதவித்தொகை
ஓ.என்.ஜி.சி. நிறுவனம் SC/ST சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த உதவித்தொகையை வழங்குகிறது. பல்வேறு தொழில்முறை படிப்புகளில் உயர்கல்வியைத் தொடர ஆதரவளிக்கிறது.