8வது சம்பள கமிஷனில் பிட்மென்ட் ஃபேக்டர் எவ்வளவு நிர்ணயிக்கப்படும் என்பது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் எதிர்பார்ப்பில் முக்கியமானதாக உள்ளது. 2.15, 2.28 அல்லது 2.57 போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கீடு செய்யப்பட்டால், பல்வேறு ஊதிய நிலைகளில் உள்ள ஊழியர்களின் ஓய்வூதியத் தொகை கணிசமாக அதிகரிக்கக்கூடும்.
உதாரணமாக, தற்போதைய கணக்கீட்டுடன் ஒப்பிடும்போது லெவல் 4 ஊழியர்களின் குறைந்தபட்ச ஓய்வூதியம் சுமார் ரூ.27,413 முதல் ரூ.32,768 வரை செல்லக்கூடும் என மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. லெவல் 5 பிரிவில் ரூ.31,390 முதல் ரூ.37,522 வரையிலும், லெவல் 6 பிரிவில் ரூ.38,055 முதல் ரூ.45,489 வரையிலும் உயர வாய்ப்புள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
அதேபோல், லெவல் 7 பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு தற்போதைய ரூ.22,450 என்ற அளவிலிருந்து ரூ.48,268 முதல் ரூ.57,697 வரை ஓய்வூதியம் கிடைக்கக்கூடும் என கணிப்புகள் கூறுகின்றன.