Railway Recruitment: 10th முடித்தவர்களுக்கு ஜாக்பாட்.! 4,500 பேருக்கு வேலை வாய்ப்பு.! யாரெல்லாம் விண்ணப்பிக்கனும்.!

Published : Sep 02, 2026, 01:05 PM IST

தெற்கு ரயில்வே 4,471 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புகிறது. இதில் புதியவர்கள் மற்றும் முன்னாள்-ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு இடங்கள் உள்ளன. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 27, 2026. தகுதி அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

PREV
15
தெற்கு ரயில்வேயில் 4,471 அப்ரண்டிஸ் காலிப்பணியிடங்கள்

தெற்கு ரயில்வேயில் மொத்தம் 4,471 அப்ரண்டிஸ் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், புதியவர்களுக்கு 163 இடங்களும், ஐடிஐ முடித்தவர்களுக்கு 4,308 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. ரயில்வே துறையில் தொழில் வாய்ப்பை எதிர்பார்க்கும் இளைஞர்களுக்கு இந்த அறிவிப்பு முக்கியமான வாய்ப்பாக அமைந்துள்ளது. தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரிபார்த்து விண்ணப்பிக்கலாம்.

25
தெற்கு ரயில்வே அப்ரண்டிஸ் வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

தெற்கு ரயில்வே அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று, தனிப்பட்ட விவரங்கள் மற்றும் கல்வித் தகுதி உள்ளிட்ட தகவல்களைப் பதிவு செய்து, தேவையான ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும். பின்னர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்தி விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 27, 2026 ஆகும். விண்ணப்பித்த பிறகு அதன் நகலைப் பதிவிறக்கம் செய்து பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நல்லது.

35
மாத உதவித்தொகை: யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?

தெற்கு ரயில்வே அப்ரண்டிஸ் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் மாத உதவித்தொகை வழங்கப்படும். 10ஆம் வகுப்பு முடித்த புதியவர்களுக்கு மாதம் ரூ.8,200, 12ஆம் வகுப்பு முடித்த புதியவர்களுக்கு ரூ.9,600, அதேபோல் ஐடிஐ முடித்த Ex-ITI விண்ணப்பதாரர்களுக்கும் மாதம் ரூ.9,600 உதவித்தொகையாக வழங்கப்படும்.

பயிற்சிக் காலத்தில் கிடைக்கும் இந்த உதவித்தொகை, தகுதியான இளைஞர்களுக்கு தொழில்துறை அனுபவத்துடன் வருமானத்தையும் வழங்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக ஐடிஐ முடித்தவர்களுக்கு பல்வேறு தொழில்களில் பயிற்சி பெறும் வாய்ப்பு இருப்பதால், திறன் வளர்ப்பதற்கும் எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.

45
பல்வேறு டிரேடுகளில் பயிற்சி: பயிற்சிக் காலம் எவ்வளவு?

தெற்கு ரயில்வே அப்ரண்டிஸ் திட்டத்தில் வெல்டர், ஃபிட்டர், பெயிண்டர் உள்ளிட்ட பல்வேறு டிரேடுகளில் பயிற்சி வழங்கப்படுகிறது. புதியவர்களுக்கான பயிற்சிக் காலம் டிரேடுக்கு ஏற்ப மாறுபடும். வெல்டர் மற்றும் மெடிக்கல் லேபரட்டரி டெக்னீஷியன் பிரிவுகளுக்கு 1 ஆண்டு 3 மாதங்களும், ஃபிட்டர் மற்றும் பெயிண்டர் பிரிவுகளுக்கு 2 ஆண்டுகளும் பயிற்சி காலமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐடிஐ முடித்தவர்களுக்கு விதிகளின்படி பயிற்சிக் காலத்தில் சலுகை வழங்கப்படும்.

55
தகுதி அடிப்படையில் தேர்வு: மதிப்பெண்கள் எப்படி கணக்கிடப்படும்?

தெற்கு ரயில்வே அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு இல்லாமல், கல்வித் தகுதி மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். Ex-ITI பிரிவில், 10ஆம் வகுப்பு மதிப்பெண்களுக்கு 100 மதிப்பெண்களும், ஐடிஐ மதிப்பெண்களுக்கு 100 மதிப்பெண்களும் என மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு சமமான முக்கியத்துவம் வழங்கப்படும். இதன் அடிப்படையில் அதிக மதிப்பெண் பெறுபவர்கள் தகுதிப் பட்டியலில் முன்னுரிமை பெறுவார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories