8வது ஊதியக்குழுவில் அதிகம் கவனம் பெறுவது ஃபிட்மென்ட் ஃபேக்டர் கோரிக்கைதான். NC-JCM ஊழியர் தரப்பு 3.833 ஃபிட்மென்ட் ஃபேக்டரை வலியுறுத்தியுள்ளது.
இந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டால், தற்போது ரூ.18,000 ஆக இருக்கும் குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் சுமார் ரூ.69,000 ஆக உயர வாய்ப்புள்ளது. மேலும், ஆண்டு ஊதிய உயர்வை 3 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், இவை ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகள் மட்டுமே. மத்திய அரசு இதற்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே, ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம் உறுதி செய்யப்பட்டுவிட்டதாகக் கருதக்கூடாது.
மொத்தத்தில், 8வது ஊதியக்குழுவால் சம்பள உயர்வு கிடைப்பதுடன், தாமதமான காலத்திற்கான அரியர்ஸ் கிடைக்குமா என்பதுதான் அரசு ஊழியர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. ஜனவரி 1, 2026 முதல் நிலுவைத் தொகை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக இருந்தாலும், மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகே முழுமையான விவரங்கள் தெரியவரும்.