பிளஸ் 2 துணைத்தேர்வு ஹால் டிக்கெட்டை இந்த தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் | முழு விபரம்

First Published | Jun 9, 2023, 5:08 PM IST

பிளஸ் 2 துணைத்தேர்வு ஹால் டிக்கெட்டை இந்த தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 8 ஆம் தேதி வெளியானது. இதில் தமிழகத்தில் மொத்தம் 94. 03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில், பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூன் 19 முதல் 26ஆம் தேதி வரை துணைத்தேர்வு நடத்தப்படுகிறது.

ஜூன் 19ஆம் தேதி மொழிப்பாடத் தேர்வு தொடங்குகிறது. ஜூன் 20ஆம் தேதி ஆங்கில மொழிப் பாடத்திற்கான தேர்வு நடைபெறும். தொடர்ந்து ஜூன் 26 வரை தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. பிளஸ் 2 துணைத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் ஜூன் 14 ஆம் தேதி முதல் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 

Tap to resize

www.dge.tn.in என்ற இணையதளம் மூலம் தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தனித்தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..இனிமே பெங்களூரு டூ சென்னைக்கு செல்ல 2 மணி நேரம் போதும்.. வந்தே பாரத் ரயிலை மிஞ்சும் வேகம் !!

Latest Videos

click me!