தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜூன் 12 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. இந்நிலையில், மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்த முதல்நாளிலேயே புத்தகங்கள் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 10 ஆம் வகுப்பு கணித பாட திட்டத்தில் சீட்டுக்கட்டு பகுதி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், பல வருடங்களாவே 10 ஆம் வகுப்பு கணித பாடத்தில் இந்த சீட்டுக்கட்டு விளையாட்டு ஒரு பாடமாகவே இருந்து வருகிறது. தமிழக அரசு ஏற்கனவே ஆன்லைன் ரம்மியை தடை செய்திருக்கிறது.
இதற்கான சட்டம் கொண்டுவரப்பட்டு, அதற்கு கவர்னரும் அனுமதி வழங்கி இருக்கிறார். ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் ஆன்லைன் ரம்மி தொடர்பான பாடப் பகுதிகள் இடம் பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்த பாடப்பகுதி ஏற்கனவே நீக்கம் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் இடம்பெற்றிருந்த சீட்டுக்கட்டு தொடர்பான பாடப்பகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.