
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரும் தொழிலதிபருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தது. உலகின் மிகவும் விலையுயர்ந்த திருமணங்களில் ஒன்றாக இந்த திருமணம் கருதப்படுகிறது.
அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்து கொண்ட ஒரு சர்வதேச பிரபலம் தற்போது கவனம் ஈர்த்துள்ளார். அவர் வேறு யாருமில்லை. அமெரிக்காவின் தொலைக்காட்சி பிரபலம் கிம் கர்தாஷியன் தான். ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் ஆடம்பர திருமணத்தில் கலந்து கொண்ட கிம், விநாயகப் பெருமானின் சிலை அருகே எடுத்துக் கொண்ட படம் உட்பட பல போட்டோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
கிம் கர்தாஷியன் ஒரு ரியாலிட்டி டிவி நட்சத்திரம் என்பதை தாண்டி அவர் ஃபேஷன் ஐகானாகவும் வலம் வருகிறார். அவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.14,000 கோடி என்று கூறப்படுகிறது., நடிப்பு, மாடலிங் மற்றும் வணிக முயற்சிகள் மூலம் அவருக்கு ஆண்டு வருமானம் மொத்தம் ரூ 900 கோடி என்று கருதப்படுகிறது.
கலிஃபோர்னியாவில் பெவர்லி ஹில்ஸில் அவருக்கு சொந்தமாக ஆடம்பர வீடு உள்ளது. இந்த வீட்டின் மதிப்பு சுமார் 500 கோடி என்று கூறப்படுகிறது. 2022 இல் வாங்கப்பட்ட இந்த பிரம்மாண்ட வீடு 4,239 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது. மேலும் நேர்த்தியான வெள்ளை தீமில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டில் 4 படுக்கையறைகள், 5 குளியலறைகள், ஒரு உடற்பயிற்சி கூடம், ஒரு தியேட்டர் மற்றும் ஒரு பெரிய நீச்சல் குளம் மற்றும் கூடைப்பந்து மைதானம் உட்பட பல ஆடம்பர வசதிகள் உள்ளன.
ஆடம்பர வீட்டை தவிர கிம் பிரைவெட் ஜெட்டையும் வைத்திருக்கிறார். 2022 ஆம் ஆண்டில், 1,255 கோடி மதிப்புள்ள Gulfstream ஜெட் விமானத்தை வாங்கினார். அதற்கு 'கிம் ஏர்' என்று அவர் பெயரிட்டுள்ளார். இந்த. ஜெட் விமானத்தில் கிங் சைஸ் பெட், இரண்டு குளியலறைகள் மற்றும் காஷ்மீர் லெதர் இருக்கைகள் உள்ளன, இதில் 16 பயணிகள் வரை தங்கலாம்.
ரூ. 1 கோடி மதிப்புள்ள Audemars Piguet Royal Oak மற்றும் ரூ. 61 லட்சம் மதிப்பிலான பதிப்பு Aujacob & Co Casio G-Shock உட்பட பல ஆடம்பர கடிகாரங்களை கிம் வைத்திருக்கிறார். .
உலகம் முழுவது உள்ள பல்வேறு இடங்களுக்கு செல்ல ஆர்வம் காட்டி வரும் கிம் கர்தாஷியன் அடிக்கடி கோஸ்டாரிகாவின் வில்லாவுக்கு செல்வது வழக்கம். அந்த வில்லாவில் தங்க ஒரு நாள் வாடகை ரூ. 20 லட்சம் ஆகும். மேலும் துபாய், இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்ற இடங்களுக்கும் அவர் அடிக்கடி சுற்றுலா செல்கிறார்.
கிம் ஆடம்பர் ஹேண்ட்பேக்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார். அவரின் 130 ஆடம்பர பைகள் சேகரிப்பில் ₹3 கோடி மதிப்பிலான ஹிமாலயன் க்ரோக்கடைல் டயமண்ட் பர்கின் போன்றவை உள்ளன.
மேலும் பல ஆடம்பர கார்களையும் அவர் வைத்திருக்கிறார். அதன்படி ரூ. 3.5 கோடி மதிப்புள்ள vanity van, மற்றும் ரூ.7.9 கோடி மதிப்புள்ள Rolls Royce Ghost உட்பட பல சொகுசு கார்கள் அவரிடம் உள்ளது. அவர் விளம்பரங்களுக்கு ரூ. 8 கோடி வரை சம்பளம் பெறுவதாகவும் கூறப்படுகிறது.