யார் இந்த விஜய்பத் சிங்கானியா? அம்பானி, அதானியை விட பணக்காரராக இருந்தவரின் நிலைமை இப்படியா!

First Published | Aug 6, 2024, 6:02 PM IST

Raymond Vijaypat Singhania: சிங்கானியா ரேமண்ட் குழுமத்தின் உரிமையாளராக இருந்தபோது, இந்திய பிசினஸ் உலகில் முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, கௌதம் அதானி போன்றவர்களை விட பெரிய பணக்காரராக இருந்தார்.

Vijaypat Singhania

விஜய்பட் சிங்கானியா ரேமண்ட் சாம்ராஜ்யத்தின் தலைவராக இருந்தது ஒரு காலம். அவர், அந்த நேரத்தில் இந்தியாவின் பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருந்தார். ஆனால் ஏதோ தவறு நடந்தது. நிலைமை தலைகீழாக மாறியது.

Vijaypat Singhania

ஒரு காலத்தில் இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருந்த சிங்கானியா, தற்போது வாடகை குடியிருப்பில் வசித்து வருகிறார். இளமையில் சிங்கானியா ரேமண்ட் குழுமத்தின் உரிமையாளராக இருந்தபோது, முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, கௌதம் அதானி போன்ற இன்றைய கோடீஸ்வரர்களை விட பெரிய பணக்காரராக இருந்தார்.

Tap to resize

Vijaypat Singhania

எல்லாம் நன்றாகப் போய்கொண்டு இருந்தபோது, அவரது மகன் அவரை வீட்டை விட்டு வெளியேற்றினார். சிங்கானியா நிறுவனத்தில் தனது அனைத்து பங்குகளையும் மகன் கௌதமின் பெயரில் எழுதி வைத்தது விபரீதமாகிவிட்டது. அதில் இருந்து தந்தை-மகன் இருவருக்குமான உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கியது.

Vijaypat Singhania

ஒரு முறை நிலம் தொடர்பான தகறாறு பெரிய பகையாக வளர்ந்ததால், கௌதம் விஜயபத் சிங்கானியாவை தனது சொந்த வீட்டிர் இருந்தே வெளியேற வேண்டிய நிர்பந்தம் உருவானது என விஜயபத் சிங்கானியா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Vijaypat Singhania

முன்னாள் கோடீஸ்வரரான விஜய்பட் சிங்கானி இப்போது அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே கடினமான நிலையில் போராடி வருகிறார். ஒரு காலத்தில் சொகுசாக வாழ்ந்தவர் ஒரே ஒரு தவறான முடிவால் அதல பாதாளத்திற்குச் சரிந்திருக்கிறார்.

Latest Videos

click me!