கடனுக்கு EMI கட்டத் தவறினால் என்ன செய்ய வேண்டும்? சில எளிமையான டிப்ஸ்!!

90 நாட்களுக்கும் மேல், EMI செலுத்தாமல் இருந்தால், உங்கள் கணக்கு வாராக் கடனாக (NPA) வகைப்படுத்தப்படலாம். எனவே கடனுக்கு EMI செலுத்துவதை தவறவிடாமல் இருக்கு சில வழிகளைப் பின்பற்றலாம்.

Loan EMI tips

EMI கட்டத் தவறுவது கடன் தகுதியைப் பாதிக்கும். தவறவிட்ட பேமெண்ட்களின் விவரத்தை கிரெடிட் ரிப்போர்ட் காண்பிக்கும். இதனால் எதிர்காலத்தில் மீண்டும் கடன் வாங்க விண்ணப்பித்தால், ஒப்புதல் பெறுவதை சிக்கலாக்கிவிடும்.

EMI repayment

90 நாட்களுக்கும் மேல், EMI செலுத்தாமல் இருந்தால், உங்கள் கணக்கு வாராக் கடனாக (NPA) வகைப்படுத்தப்படலாம். அப்படி நேர்ந்தால் கடன் வழங்கிய வங்கி அல்லது நிறுவனம் பிணையத்தை ஏலம் விடும் நிலை ஏற்படும். எனவே கடனுக்கு EMI செலுத்துவதை தவறவிடாமல் இருக்கு சில வழிகளைப் பின்பற்றலாம்.


Missed Loan EMI

EMI செலுத்தத் தவறியதை கூடிய விரைவில் கடன் வழங்கிய வங்கிக்குத் தெரியப்படுத்தவும். அதற்கான காரணத்தையும் விளக்கவும். மருத்துவ அவசரநிலை போன்ற சரியான காரணமாக இருந்தால், அடுத்த மாதம் வரை அவகாசம் கிடைக்கலாம்.

Personal Loan EMI

ஒரு நாளில் EMI செலுத்தத் தவறி இருந்தால், தயங்காமல் உடனடியாகச் தவணையைச் செலுத்திவிடலாம். இவ்வாறு செலுத்த ஏதேனும் தாமதக் கட்டணம் உள்ளதா என்று பார்த்துக்கொள்ளலாம்.

Loans EMI

எதிர்காலத்தில் தாமதமாக EMI கட்டுவதைத் தவிர்க்க, தானாகவே EMI செலுத்தும் வகையில் வங்கிக் கணக்கில் செட் செய்துகொள்ளலாம். இதனால் குறிப்பிட்ட தொகை தானாகவே உங்கள் கணக்கிலிருந்து கழிக்கப்படும். பணம் செலுத்தப்பட்டதும் மின்னஞ்சல் அல்லது SMS மூலம் தகவலும் கிடைக்கும்.

Instant Loans

கடன்களை ஒரே மாதாந்திர EMI ஆக ஒருங்கிணைக்க, தனிநபர் கடனைப் பெறலாம். இது திருப்பிச் செலுத்துவதை எளிதாக்கும். தவறவிட்ட EMI களை திருப்பிச் செலுத்துவதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால், நண்பர்கள் அல்லது குடும்பத்தினரிடம் பண உதவிக் கோரலாம். உங்கள் நிதி நிலைமை மேம்பட்டவுடன், அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுக்கலாம்.

Short-Term Loans

மொபைல் மூலம் கடன் வழங்குவதாகக் கூறி மோசடியில் ஈடுபடும் பல செயலிகள் உள்ளன. அவற்றை நம்பி ஏமாறாமல் இருக்க வேண்டும். இதேபோல அதிக வட்டிக்கு பணத்தைக் கொடுத்து டார்ச்சர் செய்யும் கந்துவட்டிக்காரர்களையும் தவிர்க்க வேண்டும்.

Latest Videos

click me!