What is ELSS Funds?
கோடீஸ்வரனாக விரும்பும் துணிச்சலான முதலீட்டாளர்களுக்கு இ.எல்.எஸ்.எஸ். மியூச்சுவல் ஃபண்ட்கள் (ELSS Mutual Funds) சிறந்த தேர்வாக இருக்கும். இந்த மியூச்சுவல் ஃபண்டு பெரும்பகுதியை ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி தொடர்பான கருவிகளில் முதலீடு செய்வதுதான் இதன் ஸ்பெஷல். இந்த பண்டுகள் வரி சேமிப்பு திட்டங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
ELSS Mutual Funds
இ.எல்.எஸ்.எஸ் மியூச்சுவல் ஃபண்டுகள் (ELSS Mutual Funds) முதலீட்டாளர்களுக்கு வரி சேமிப்பு வாய்ப்பை வழங்கும். வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80சி இன் கீழ் ஆண்டுதோறும் ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு பெற முடியும்.
TATA ELSS Savings Scheme
டாடா இ.எல்.எஸ்.எஸ் வரி சேமிப்பு திட்டம் (TATA ELSS Savings Scheme): இந்த மியூச்சுவல் பண்டு திட்டம் ஆண்டுக்கு 15.65% வருமானம் கொடுத்துள்ளது. இதில் மாதம்தோறும் ரூ.10,000 SIP முதலீடு செய்தால் 18 ஆண்டுகளில் ரூ.1.53 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.
SBI Mutual Funds
எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்டு (SBI Mutual Fund): ஸ்டேட் வங்கியின் இந்த மியூச்சுவல் ஃபண்டு இந்தியச் சந்தையில் அதிக முதலீட்டாளர்களைக் கவர்ந்துள்ளது. வருடத்துக்கு 30% வரை வருவாய் தரக்கூடிய சிறந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு இது.
DSB ELSS Fund
டி.எஸ்.பி இ.எல்.எஸ்.எஸ். ஃபண்ட் (DSB ELSS Fund): இந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டம் 17.14 சதவீதம் வரை வருடாந்திர ரிட்டன் தருகிறது. 10,000 ரூபாயை ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்துவந்தால் ரூ.1.24 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டலாம்.
Mutual Fund Investments
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் (Mutual Fund Investments) சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன்பாக எல்லா ஆவணங்களையும் கவனமாகப் படித்துப் புரிந்துகொள்ளவும். செபி (SEBI) அங்கீகாரம் பெற்ற பங்குச்சந்தை நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.