வேலையை விட்டுவிட்டால் பிஎஃப் கணக்கு என்ன ஆகும் தெரியுமா?

Published : Sep 25, 2025, 04:10 PM IST

உங்கள் பிஎஃப் கணக்கை வேலையை விட்ட பிறகும் எப்படி பாதுகாக்கலாம், வட்டி எவ்வளவு காலம் வருவது, மற்றும் பணத்தை எப்போது எடுக்கலாம் என்பதற்கான விளக்கத்தை பார்க்கலாம்.

PREV
14
பிஎஃப் விதிகள்

பணி முடிந்த பிறகு உங்கள் பிஎஃப் கணக்கில் இருக்கும் நிதி எப்படி செயல்படுகிறது என்பதைப் பற்றிய கருத்துக்கள் பல குழப்பம் உண்டாக்கும். சிலர் வேலையை விட்டுவிட்டால் பிஎஃப் வட்டியும் நிதியும் நிற்கும் என்று நினைக்கிறார்கள், ஆனால் உண்மை சற்று வித்தியாசமானது ஆகும். இபிஎப்ஓ (EPFO) விதிகளின் படி, நீங்கள் வேலையை விட்டு வெளியேறினாலும், உங்கள் பிஎஃப் கணக்கு மூடப்படாது. மேலும் உங்கள் டெபாசிட் தொகைக்கு வட்டி தொடர்ந்து வரவு வைக்கப்படும். இந்த விதிகள் பணி முடிந்த பிறகும் நிதி பாதுகாப்பாக இருக்கும் என்பதை உறுதி செய்கின்றன.

24
ஊழியர் நிதி பாதுகாப்பு

இபிஎப்ஓ விதிகளின்படி, நீங்கள் 40 அல்லது 45 வயதில் வேலையை விட்டுவிட்டாலும், உங்கள் பிஎஃப் நிதியை உடனே எடுக்கவில்லை என்றால், உங்களுக்கு கணக்கில் 58 வயது வரைக்கும் வட்டி வரவு வைக்கப்படும். இதன் பொருள், பணி விட்டு வெளியேறினாலும் உங்கள் நீண்ட காலத்திற்கு வளர்ச்சி பெறும் என்பதாகும். இது வேலை முடிந்த பிறகு கூட பிஎஃப் நிதி உங்களுக்கு பயனளிக்கும் ஒரு முக்கிய அம்சமாகும்.

34
பணி முடிந்த பிறகு பிஎஃப்

58 வயதை கடந்த பிறகு நீங்கள் உங்கள் பிஎஃப் பணத்தை எடுக்கவில்லை என்றால், இபிஎப்ஓ ​​அடுத்த 3 ஆண்டுகள் (61 வயது வரை) வட்டியை தொடர்ந்து வழங்குகிறது. 61 வயதுக்குப் பிறகு உங்கள் கணக்கு செயலிழக்க வைக்கப்படும். இதன் பொருள் பணம் இழப்பதல்ல. ஆனாலும் வட்டி நிறுத்தப்படும். இதனால், நீண்ட காலத்திற்கு உங்கள் பிஎஃப் பணத்தை சேமித்து வைக்க முடியும். ஆனால் 61 வயதுக்குப் பிறகு வட்டி வராது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

44
பிஎஃப் நன்மைகள்

இபிஎப்ஓ வலைதளத்தில் உங்கள் UAN-ல் உள்நுழைந்து, KYC-ஐ புதுப்பித்து, கிளைம் படிவங்களை (31, 19, 10C) தேர்ந்தெடுத்து, உங்கள் வங்கி கணக்குடன் இணைத்தால், பணம் 7-8 நாட்களில் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். EPF டெபாசிட் பாதுகாப்பான மற்றும் நம்பகமான முதலீடாகும், தற்போது 8.25% வட்டி விகிதத்துடன் வேலையை விட்ட பிறகு நீண்ட காலத்திற்கு நிதி வளர்ச்சியை வழங்குகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories