Bankrupt
இந்தியாவில் வங்கி டெபாசிட்டுகளுக்கான டெபாசிட் இன்சூரன்ஸ் 5 லட்சம் ரூபாய் மட்டுமே. நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி திவால் ஆகும்போது இந்தப் பணம் கிடைக்கும். இந்தக் காப்பீட்டு தொகையை எப்படிப் பெறலாம் என்று இத்தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.
DICGC
ஒரு வங்கி திவாலானால் அதன் வாடிக்கையாளர்களுக்கு என்ன நடக்கும்? ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் கீழ், வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத கார்ப்பரேஷன் (DICGC) மூலம் வாடிக்கையாளர்கள் திவாலான வங்கியில் வைத்திருக்கும் பணத்துக்கு காப்பீடு வழங்குப்படுகிறது.
Bank deposit rules
பிப்ரவரி 4, 2020க்கு முன், இந்தியாவில் வங்கி டெபாசிட்டுகளுக்கான டெபாசிட் இன்சூரன்ஸ் வெறும் ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே. அதாவது ஒரு வாடிக்கையாளர் ரூ.10 லட்சம் டெபாசிட் வைத்திருந்தாலும், வங்கி திவாலானால் அவர் ரூ.1 லட்சத்தை மட்டுமே உத்தரவாதத் தொகையாகக் கோர முடியும்.
Investments
இந்த விதி 2020ஆம் ஆண்டு மாற்றப்பட்டது. டெபாசிட் காப்பீட்டுத் தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. அதாவது, திவாலான வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு உள்ளது.
Savings account
வங்கியின் உரிமம் ரத்து செய்யப்படுதல் அல்லது வங்கி நிரந்தரமாகப் மூடப்படுதல் தொடர்பான என்று அறிவிப்பு வெளியாகும் தேதியில், அந்த வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் வைத்திருக்கும் டெபாசிட் தொகை மற்றும் வட்டிக்காக காப்பீட்டுத் தொகை பெறலாம். இது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை மட்டும் கிடைக்கும்.
Bank deposit insurance
வைப்புத்தொகை காப்பீட்டு முறையின் விதிகளின்படி, ஒரு வங்கி செயலிழந்தால், அதில் கணக்கு வைத்திருப்பவர்கள் 90 நாட்களுக்குள் காப்பீட்டுத் தொகையைப் பெறுவார்கள். இதில் அனைத்து சேமிப்பு கணக்குகள், நடப்புக் கணக்குகள் மற்றும் தொடர் கணக்குகள் அடங்கும்.
Bank insolvency
இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு வங்கிகளின் கிளைகள், உள்ளூர் வங்கிகள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளும் DICGC காப்பீடு வழங்கப்படுகிறது. எனவே வங்கிகளில் டெபாசிட் செய்யும் தொகைக்கு ரூ.5 லட்சம் வரை கேரண்டி இருக்கிறது.