ஒரு குண்டுமணி தங்கம் கூட இல்லை... தங்கத்தை இருப்பு வைக்காத நாடுகள் எதெல்லாம் தெரியுமா?

First Published | Feb 14, 2024, 1:54 PM IST

உலக தங்க சபை தரவுகளின்படி, 13 நாடுககள் மிகவும் குறைவான தங்க இருப்பைக் கொண்டிருக்கின்றன. இதனால் அவை தங்க இருப்பு இல்லாத நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன.

உலக நாடுகள் பலவும் தங்கத்தை முக்கியச் சொத்தாகக் கருதி தங்க இருப்பை அதிகரிக்க முயற்சி செய்கின்றன. உலகில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் அதிக அளவு தங்கத்தை இருப்பு வைக்க விரும்புகின்றன.

ஆனால், தங்கத்துக்குத் தட்டுப்படாக இருக்கும் நாடுகளும், தங்கமே இல்லாத நாடுகளும் இருக்கின்றன என்றால் நம்ப முடிகிறதா?

Tap to resize

பல நாடுகள் தங்கள் வசம் மிகவும் குறைந்த அளவிலேயே தங்கத்தை கையிருப்பு வைத்துள்ளன. உலக தங்க சபையின் தரவுகளின்படி, தங்க கையிருப்பு இல்லாத 13 நாடுகள் இருக்கின்றன. நிகரகுவா, கேமரூன், ஆர்மீனியா, காபோன், துர்க்மெனிஸ்தான், காங்கோ, சாட் மற்றும் எரித்திரியா ஆகிய நாடுகளில் தங்கமே இல்லையாம்.

gold 7

கோஸ்ட்டா ரிக்கா, அசர்பைஜான், குரேஷியா, நோர்வே மற்றும் கனடா ஆகிய நாடுகள் மிகக் குறைவான அளவு தங்க கையிருப்பை கொண்டவையாக உள்ளன. இதனால் இந்தப் பதிமூன்று நாடுகளும் தங்க இருப்பு இல்லாத நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன.

gold 5

கோஸ்ட்டா ரிக்கா ஒரு காலத்தில் அதிக தங்கத்தை வைத்திருந்தது. ஆனால் 1930களுக்குப் பிறகு அந்த நாட்டின் தங்க கையிருப்பு வேகமாகக் கரைந்துவிட்டது. இப்போது மீண்டும் தங்கத்தைச் சேர்த்துள்ள கோஸ்ட்டா ரிக்கா 7.57 பில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கத்தை வைத்திருக்கிறது.

gold 3.j

அசர்பைஜான் 8.31 பில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கத்தை இருப்பில் வைத்துள்ளது. குரேஷியா 28.31 பில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கத்தை இருப்பு வைத்திருக்கிறது.

Latest Videos

click me!