நடுத்தர வர்க்கத்தினர், பண நெருக்கடி திடீரென வரும்னு நம்புறாங்க. ஆனா, முதலீட்டு நிபுணர் வாரன் பஃபெட் சொல்றபடி, பணப் பற்றாக்குறை திடீர்னு வராது. நாம தினமும் செய்யுற சின்ன சின்ன தவறுகள்தான், பெரிய நிதி இழப்புக்குக் காரணமா அமையுது. இந்த பழக்கங்களை விட்டாலே பணக்காரர் ஆகலாம்.
26
கடன்களை முதலில் அடைப்பது புத்திசாலித்தனம்
இப்போல்லாம் எல்லோர் கையிலும் கிரெடிட் கார்டு இருக்கு. பேங்க் விளம்பரத்தைப் பார்த்து வாங்குறவங்கதான் அதிகம். 18%க்கும் மேல வட்டி கட்டுறது, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்தை வீணாக்குறதுக்கு சமம். அதிக வட்டி கடன்களை முதலில் அடைப்பதுதான் புத்திசாலித்தனம். இந்த வட்டி சக்கரவியூகத்தில் இருந்து எவ்வளவு சீக்கிரம் வெளியே வர்றீங்களோ, அவ்வளவு நல்லது.
36
மீதி பணத்துல செலவு செய்யுங்க
ஒரே ராத்திரியில் பணக்காரர் ஆகணும்னு நினைக்கிற அவசரம்தான் பலரையும் நஷ்டத்தில் தள்ளுது. ஒரு செடி மரமாக வளர நேரம் எடுக்குற மாதிரி, பணமும் பெருக பொறுமை அவசியம். பலர் செலவு செஞ்சது போக மீதி இருந்தா சேமிப்பாங்க. ஆனா பஃபெட் சொல்றது என்னன்னா, முதல்ல முதலீட்டுக்கு பணத்தை ஒதுக்கிட்டு, மீதி பணத்துல செலவு செய்யுங்க.
சமூகத்துல கௌரவத்துக்காகவும், அடுத்தவங்ககிட்ட காட்டிக்கவும் பெரிய வீடு, கார் வாங்குறது புத்திசாலித்தனம் இல்லை. இதுக்காக வாங்குற பேங்க் லோன், EMI எல்லாம் உங்க வருமானத்தோட பெரும்பகுதியை சாப்பிட்டுடும். இதனால சேமிப்பு, முதலீடுக்கு பணமே இருக்காது. வீடுங்கிறது நிம்மதியா வாழறதுக்கு, அடுத்தவங்ககிட்ட பந்தா காட்டுறதுக்கு இல்லை.
56
சூதாட்டம், லாட்டரி வேண்டாம்
சொகுசான வாழ்க்கைக்காக சூதாட்டம், லாட்டரினு சுலபமான வழிகளைத் தேர்ந்தெடுப்பது ரொம்ப ஆபத்தானது. லாட்டரியில் பணம் கிடைக்கும்ங்கிற நம்பிக்கையில செய்யுற சின்ன முதலீடுகூட, உங்களை பெரிய நஷ்டத்துல தள்ளிவிடும். கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்தை அதிர்ஷ்டத்துல பணயம் வைக்காம, பாதுகாப்பான வழிகளில் முதலீடு செய்யுங்க. இதுதான் பஃபெட் கொடுக்குற அட்வைஸ்.
66
சேமிப்புலயும் முதலீட்டுலயும் கவனம்
நிறைய பேர் ஸ்டேட்டஸுக்காக கடன் வாங்கி புது கார் வாங்குறாங்க. கார் ஷோரூமை விட்டு ரோட்டுக்கு வந்த உடனேயே அதோட மதிப்பு குறைய ஆரம்பிச்சிடும். ஆனா, உங்க EMI மட்டும் குறையாது. வாரன் பஃபெட்டே பல வருஷமா ஒரு பழைய காரைத்தான் பயன்படுத்தினார். பணக்காரர் ஆகணும்னு ஆசைப்பட்டா, இந்த பழக்கங்களை விட்டுட்டு, சேமிப்புலயும் முதலீட்டுலயும் கவனம் செலுத்துங்க.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.